செங்கதிரோன் சேயோன்
இரவெல்லாம் கண்ணயர்ந்த கதிரவன் விடியலில் தன் சிவந்த கண் திறந்து வானில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்களின் மீது விளைவிக்கும் வண்ணக் கோலங்களை காணுகையில் , பிரம்மிக்க வைக்கும் இநத பிரமாண்ட பிரபஞ்சத்தின் முன் நான் என்னும் மமதை மரணித்து , சிறு துரும்பாக நாம் நிற்க்க , இந்த நீலக்கோள் அண்டம் நம்மை நோக்கி நெருங்குவதாக தோன்றும் அந்த வானத்தரசன் வங்கக் கடலில் குளித்து , முகத்தில் தீக்களி பூசி , செங்காந்தழாய் மலர்ந்து, ..கதவின் மறைவில் நின்று கண்ணசைக்கும் காதலியை போல மெல்ல மெல்ல இவ்வுலகை எட்டி பார்க்கும் அழகான இளம் காலையில்.. செம்மண்ணுக்குள் இருந்து பூவெளி வந்த இளமஞ்சளை அரைத்து பூசியது போல மெனியெல்லாம் அவனின் மஞ்சள் கதிர்கள் படர .. ஆதவன் எனும் ஆண்பாலுக்குள் மறைந்திருக்கும் பெண்பால் வெளிப்படும்... அவ்வேளையில் கதிர் அவனை கட்டியனைக்க தோன்றும், கண் சிறைக்குள் கட்டிப் போடவும் தோன்றும். முத்தமிட தோன்றும் , நினைவுக்குள் அவனை மூழ்கிவைக்க தோன்றும் .. ஆனால் அவனோ நம்மை மெஸ்மரிசம் செய்து , மெல்ல கண்ணயர வைத்து , கணநேரத்தில் கையெட்டா உயரம் தாவிச் சென்றிடுவான். அதிசயமா இது ? இல்லை இதை அதிசயத...