ஊர்க்கிணறு
இயற்கையின் எளிமையுடன் தொடர்பு கொண்ட அமைதியான கிராமத்து வாழ்வு அழகானது. அங்கு வசிக்கும் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறை வழக்கங்களில் ஒவ்வொன்றிலும் அழகியல் இருந்தது . கோவிலும் கோவில் சார்ந்த திருவிழாக்களும் என ஒர் அழகு , விவசாய நிலங்களும் அது சார்ந்த வேலைகளும் ஒர் அழகு . அவ்வாறே ஊர்க்கிணறும் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் பேரழகு .. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு அடி , ஐந்நூறு அடி தோண்டினாலும் கிடைக்காத தண்ணீர் பத்து அடி தோண்டினாலே பொங்கி ஊறும் குளிர்ச்சியான நிலப்பரப்பு எங்க ஊர். இந்த தண்ணீருக்காகவே வாக்கப்பட்டு வந்தவர்கள் பலர். அதை பற்றி ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்று இவ்வாறு கூறும் . "ஊரைச் சுற்றிலும் உப்புத்தண்ணீர். எங்க ஊர்க்கிணறு நல்லத் தண்ணீர் தேங்காய்த்தண்ணீர் புன்னைச்சாத்தான்குறிச்சி , தேடி வாங்க வாக்கப்பட .. " எங்க ஊரில் வாக்கப்பட்டு வந்த புதுப்பெண்னை ஊர் பொது கிணற்றுக்கு அழைத்துச்சென்று . வெற்றிலையை கிணற்றில் போட சொல்வார்கள் . அந்த புதுப்பெண் அவ்வாறு கிணற்றுக்குள் போடும்...