பேரண்டத்தின் பேராற்றல்
https://youtube.com/shorts/90hmo0CFm6Q?si=Y0yQq6Hl11Ej7Mh4 . விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் , எனக்கு என்று சில வேலைகளை ஒதுக்கிவிடுவாள் என்னவள். அதில் மிகவும் முக்கியமானது. வாஷிங்மெஷினில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் கட்டியிருக்கும் மெல்லிய கம்பியில் விரித்து உலரவைத்து எடுத்து வருவது. அதுவும் மதிய நேர உச்சிவெயிலில் காயப்போட கூடாது என்றும், அவ்வாறு காயவிட்டால் வெயில் கடுமை காரணமாக துணியின் மெல்லிய நூலிலைகள் பாதிக்கப்பட்டு துணிமணிகள் எளிதில் டர்ர்ர்ர்.. என்று கிழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்நேரம் துணிகளை உலரவைக்க அனுமதியில்லை.. அதனால் நான் எங்கள் ஊர் அருகில் இருக்கும் வங்கக்கடலின் ஆழமான பகுதியில், மீனவர்களால் பிடிக்கப்பட்ட வஞ்சரம் மீன்களை , அன்றே காயல்பட்டிணத்தின் மீன் மார்கெட்டில் இரத்தம் சொட்டச் சொட்ட வாங்கி வந்து செய்த மீன்குழம்பை வட்டிலில் கொட்டி .. சப்பு கொட்ட வயிற்றில் கொட்டிய மயக்கத்தில் இருக்கும் அந்த மூன்று மணியளவில் தான் மாடியில் அவற்றை காயப்போட கட்டளையிடுவாள். அந்த நீல நிற பிளாஸ்டிக் பக்கெட்டில் அவற்றை அள்ளிக்கொண...