அவளுக்காக ஓர் கடிதம் 💌💌

       மனதில் அவளுக்குகென்றும் பல ஆசைகள் கனவுகள் இருந்திருக்கும். ஆனால் கைபிடித்தவனின் ஆசைகள் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளின் ஆசை,கனவுகள் அனைத்தையும் மனதுக்குள் மறைத்து கொண்டாள் என்பதை விட மனதுக்குள் மறத்துப் போனாள் எனலாம் . 

இந்த சமுகத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கிகாரம் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்தே இருக்கிறது என்பதை வாழ்க்கையில் பலதடவை உணர்ந்திருந்ததனால் உண்டான சமூகத்தின் மீதான வன்மத்தினால் பணத்தின் மீது பற்று வைத்து , மான அவமானங்களை கடந்து வேக ,வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன். அந்த ஓட்டம் திரைகடலைத் தாண்டி சென்றிருந்தது.. நான் அவளை விட்டு புறத்தே தூரமாக தள்ளி இருக்க , அவள் அங்கே அகத்தே மனதால் மறித்து கொண்டிருந்தால் ..

எங்கள் தலைவன் தலைவி வாழ்கையில் கூடல்கள் குறைந்து ஊடல்கள் நிறைந்திருந்தது. அதனை அறிந்தாலும் அவள் மனதுக்கு மருந்திடும் மனம் தான் எனக்கில்லை.. இதனால் நான் இழந்தது வாழ்க்கையில் மிக முக்கியமான எத்தனையோ அழகான தருணங்களை . வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று சொல்வதை விட கடத்திகொண்டிருந்தேன் என்பதே சரியாக இருக்கும் .. 

வேக வேகமாக சென்று கொண்டிருந்த நான் என்னை சற்று நிலைப்படுத்திக் கொண்டு, ஆறவமர்ந்து எனை ஆசுவாசபடுத்திக் கொண்ட என் வாழ்வை திரும்பி பார்க்கின்றேன்... என்னோடு அவள் இருந்தாலும்,  ஆவிச்சேராமல்  அவளை விட்டு தூரமாய் விலகி நிற்பது போன்று ஒர் உணர்வு.. 

 அதுவரை அவளை பெரிதாக ரசிக்காத நான் , அவளை உள்ளார்ந்தமாக ரசிக்க தொடங்கிய போது வார்த்தைகளால் , செயல்களால் அவளை காயப்படுத்திய நிகழ்வுகளை நினைத்து மனது கணக்க ஆரம்பித்தது... 

   அம்மா , அப்பா , உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் அவர் அவர்களுக்கான உறவுகள் உண்டு , ஆனால் நம்மை நம்பி வந்தவளுக்கு நாம் தான் உறவு , அந்த உறவை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .., 

என் உச்சப்பட்ச கோபத்தை எனக்காக தாங்கிக்கொண்ட அவளிடம் இப்பொழுது என் உச்சப்பட்ச காதலை காட்ட விரும்புகின்றேன்.. இதையும் எனக்காக அவள் தாங்கிக் கொள்வாள் என...

விக்கி இராஜேந்திரன்.. ✍️✍️ 












Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்