அவளுக்காக ஓர் கடிதம் 💌💌
மனதில் அவளுக்குகென்றும் பல ஆசைகள் கனவுகள் இருந்திருக்கும். ஆனால் கைபிடித்தவனின் ஆசைகள் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளின் ஆசை,கனவுகள் அனைத்தையும் மனதுக்குள் மறைத்து கொண்டாள் என்பதை விட மனதுக்குள் மறத்துப் போனாள் எனலாம் . இந்த சமுகத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கிகாரம் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்தே இருக்கிறது என்பதை வாழ்க்கையில் பலதடவை உணர்ந்திருந்ததனால் உண்டான சமூகத்தின் மீதான வன்மத்தினால் பணத்தின் மீது பற்று வைத்து , மான அவமானங்களை கடந்து வேக ,வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன். அந்த ஓட்டம் திரைகடலைத் தாண்டி சென்றிருந்தது.. நான் அவளை விட்டு புறத்தே தூரமாக தள்ளி இருக்க , அவள் அங்கே அகத்தே மனதால் மறித்து கொண்டிருந்தால் .. எங்கள் தலைவன் தலைவி வாழ்கையில் கூடல்கள் குறைந்து ஊடல்கள் நிறைந்திருந்தது. அதனை அறிந்தாலும் அவள் மனதுக்கு மருந்திடும் மனம் தான் எனக்கில்லை.. இதனால் நான் இழந்தது வாழ்க்கையில் மிக முக்கியமான எத்தனையோ அழகான தருணங்களை . வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று சொல்வதை விட கடத்திகொண்டிருந்தேன் என்பதே சரியாக இருக்கும் .....