குழந்தை இலக்கியம்
"முடிவற்ற உலகங்களின்
கடற்கரையில் குழந்தைகள் கூடுகின்றன .எல்லையற்ற ஆகாயம் மேலே சலனமற்று இருக்கிறது . முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொணடும் ஆனந்தக் கூத்தாடிக் கொணடும் குழந்தைகள் கூடுகின்றன.
குழந்தைகள் தங்கள் வீடுகளை மணலினால் கட்டுகின்றன; வெறும் சிப்பிகளை வைத்துக்கொண்டு விளையாடுகின்றன; உலர்ந்த சருகுகளைக் கொண்டு ஓடம் முடைகின்றன ; அகண்ட ஆழ்ந்த கடலிலே ஆனந்தமாக அவற்றை மிதக்க விடுகின்றன. " - தாகூர்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று அனைவரும் எண்ணி எண்ணி மகிழும் நம் குழந்தை பருவத்தை போல இப்போது இருக்கும் குழந்தைகளின் நிலை இல்லை என்றே நினைக்கின்றேன் கொட்டாங்குச்சி, பட்டம் , ஓலை காத்தாடி, களிமண்ணு, பால்சிப்பி,பானை சட்டி , உடைமரப் பூ, ஊமத்தம்பூ, பொய் கடுகு , பனங்காய் , தென்னை மட்ட, வாழைதண்டு ,பொடி தட்டை, சீகரெட் அட்டை , தீப்பெட்டி மட்டி , தகர டப்பா , பட்டுப்பூச்சி, தட்டான்பூச்சி , தண்ணிப்பாம்பு, தாவும் தவளை , காட்டுச்செடி, காக்கா முட்டை , ஓணான், அணில் கூடு , கொக்கு குஞ்சி , ஓடை நத்தை , வயல் வரப்பு , தோட்டம் தொரவு, ஆறு , குளம் , வாய்க்கால் ,ஓடை .. வேப்பம் பழம், புளியம் பழம் ,கள்ளிப்பழம் என இயற்கையே எங்களின் விளையாட்டு உலகமாக இருந்தது.
பொழுதில் பஜாருக்கு சென்ற அப்பா பொழுது அடைய வீட்டிற்கு திரும்பும் வரை அந்த பத்தடி அகல நீண்ட முட்டு முடுக்கின் இருகிய மணல் முற்றத்தின் மையமாக நின்று எரியும் அந்த ஒற்றைத் தெருவிளக்கின் ஒளியில் ஓடியும் ஆடியும் பாடியும் விளையாண்ட நம் குழந்தை பருவம் , பத்துக்கு பத்து அறையில் தொலைக்காட்சியின் ஒளி ஓலி வெள்ளத்தில் அதன் முன்பு ஒய்யாரமாக உட்காந்து பொழுபோக்கும் இந்த கால குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை . நம் தாத்தாவும் , பாட்டியும் நமக்கு சொல்லிய கதையும் , பாட்டும் , அவர்கள் முன்னோர் அவர்களுக்கு சொல்லியவை , அவை வெறும் கதையும் பாடல்களும் அல்ல அவற்றில் அவர்களின் வாழ்வியலும் வரலாறும் கலந்து இருக்கிறது. இப்படி பரம்பரை பரம்பரையாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட அந்த குழந்தை இலக்கியம் எனும் நம் முன்னோர் சேர்த்து வைத்த செல்வம். காலத்தின் வாயில்பட்டு இந்த கால குழந்தைகளுக்கு சொல்லப்படாமல் அவை நம்மிடம் இருந்து அழிந்துவருகின்றது.
நாட்டுப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிறுவர் உலகம் மற்றும் விளையாட்டு என்ற பெயரில் பலர் அவற்றை தொகுத்து இருக்கின்றனர் ஆனால் அவை அவர்களின் வட்டார அளவில் மட்டுமே இருக்கின்றன. என் மண்ணில் என் மக்களிடையே வழக்கில் இருந்த விளையாட்டையும் அந்த விளையாட்டோடு தொடர்புடைய பாடல்களையும் தெரிந்தவரை பதிவு செய்ய முயன்றிருக்கின்றேன்..
அட்டலங்கா புட்டலங்கா
அடுக்கி வச்ச மாதுளங்கா
தேங்காயத் துருவி
தெருவிலே போட்டு
மாங்காயத் துருவி
மறவையிலே போட்டு
பச்ச மீன சுட்டு பரணுலே வச்சு
உரிச்ச மீன சுட்டு உறியிலே வச்சு
இந்த பூனை சொல்லி குடுத்து
அந்த பூனை தின்னுச்சாம்.
•——————•°•✿•°•——————•
மல்லிப்பூவே மல்லிப்பூவே !
மெல்ல வந்து நுள்ளிப்போ !
மல்லிப்பூவே மல்லிப்பூவே !
மெல்ல வந்து நுள்ளிப்போ !
ஆடாம அசையாம
அன்னம் போல குனிஞ்சுக்கோ..
•——————•°•✿•°•——————•
"பூப்பரிக்க வருகிறோம் ,
பூப்பரிக்க வருகிறோம்!
எந்த பூவை பறிக்கிறீர்கள்,
எந்த பூவை பறிக்கிறீர்கள்!
மித்ரா பூவை பறிக்கிறோம்,
மித்ரா பூவை பறிக்கிறோம் !
யாரை அனுப்ப போகிறீர்கள் ,
யாரை அனுப்பபோகிறீர்கள்!
கீதாவை அனுப்ப போகிறோம்,
கீதாவை அனுப்ப போகிறோம். "
•——————•°•✿•°•——————•
அத்தக்கா புத்தக்கா தவளச்சோறு
எட்டு எரும , எரும பாலு
சுக்கு மரத்துல துணியக்கட்டி
கூப்புடுங்க குலவிடுங்க
குறத்தி மொவள கையெடுங்க .
•——————•°•✿•°•——————•
கரும்பு ராணி செம்பு ராணி
காத்த காத்த முருக்குது ...
முருக்குது.....
•——————•°•✿•°•——————•
திரி திரி பம்பக்கா
கள்ளன் வாரான்..
கதவ பூட்டிக்க
சிக்குனு பூட்டிக்க..
சிக்குனு பூட்டிக்க..
•——————•°•✿•°•——————•
மாகொழுக்கட்டை ,
மஞ்சகொழுக்கட்டை ,
மாமியார் தந்த பிடிகொழுக்கட்டை ..
•——————•°•✿•°•——————•
கொக்கே கொக்கே பூப்போடு..
கொக்கே கொக்கே பூப்போடு..
என்று சொல்லிக்கொண்டே வானத்தில் பறக்கும் வெண்கொக்கு கூட்டதை நோக்கி கையை நீட்டுவோம்.. விரல் நகங்களில் வெள்ளை புள்ளி தெரிந்தால் கொக்கு பூப்போட்டதாக நினைத்து நமக்கு அதிர்ஷ்டம் வருவதாக எண்ணிக்கொள்வோம்.
•——————•°•✿•°•——————•
நாட்டுப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிறுவர் உலகம் மற்றும் விளையாட்டு என்ற பெயரில் பலர் அவற்றை தொகுத்து இருக்கின்றனர் ஆனால் அவை அவர்களின் வட்டார அளவில் மட்டுமே இருக்கின்றன. என் மண்ணில் என் மக்களிடையே வழக்கில் இருந்த விளையாட்டையும் அந்த விளையாட்டோடு தொடர்புடைய பாடல்களையும் தெரிந்தவரை பதிவு செய்ய முயன்றிருக்கின்றேன்..
அட்டலங்கா புட்டலங்கா
அடுக்கி வச்ச மாதுளங்கா
தேங்காயத் துருவி
தெருவிலே போட்டு
மாங்காயத் துருவி
மறவையிலே போட்டு
பச்ச மீன சுட்டு பரணுலே வச்சு
உரிச்ச மீன சுட்டு உறியிலே வச்சு
இந்த பூனை சொல்லி குடுத்து
அந்த பூனை தின்னுச்சாம்.
•——————•°•✿•°•——————•
மல்லிப்பூவே மல்லிப்பூவே !
மெல்ல வந்து நுள்ளிப்போ !
மல்லிப்பூவே மல்லிப்பூவே !
மெல்ல வந்து நுள்ளிப்போ !
ஆடாம அசையாம
அன்னம் போல குனிஞ்சுக்கோ..
•——————•°•✿•°•——————•
"பூப்பரிக்க வருகிறோம் ,
பூப்பரிக்க வருகிறோம்!
எந்த பூவை பறிக்கிறீர்கள்,
எந்த பூவை பறிக்கிறீர்கள்!
மித்ரா பூவை பறிக்கிறோம்,
மித்ரா பூவை பறிக்கிறோம் !
யாரை அனுப்ப போகிறீர்கள் ,
யாரை அனுப்பபோகிறீர்கள்!
கீதாவை அனுப்ப போகிறோம்,
கீதாவை அனுப்ப போகிறோம். "
•——————•°•✿•°•——————•
அத்தக்கா புத்தக்கா தவளச்சோறு
எட்டு எரும , எரும பாலு
சுக்கு மரத்துல துணியக்கட்டி
கூப்புடுங்க குலவிடுங்க
குறத்தி மொவள கையெடுங்க .
•——————•°•✿•°•——————•
கரும்பு ராணி செம்பு ராணி
காத்த காத்த முருக்குது ...
முருக்குது.....
•——————•°•✿•°•——————•
திரி திரி பம்பக்கா
கள்ளன் வாரான்..
கதவ பூட்டிக்க
சிக்குனு பூட்டிக்க..
சிக்குனு பூட்டிக்க..
•——————•°•✿•°•——————•
மாகொழுக்கட்டை ,
மஞ்சகொழுக்கட்டை ,
மாமியார் தந்த பிடிகொழுக்கட்டை ..
•——————•°•✿•°•——————•
கொக்கே கொக்கே பூப்போடு..
கொக்கே கொக்கே பூப்போடு..
என்று சொல்லிக்கொண்டே வானத்தில் பறக்கும் வெண்கொக்கு கூட்டதை நோக்கி கையை நீட்டுவோம்.. விரல் நகங்களில் வெள்ளை புள்ளி தெரிந்தால் கொக்கு பூப்போட்டதாக நினைத்து நமக்கு அதிர்ஷ்டம் வருவதாக எண்ணிக்கொள்வோம்.
•——————•°•✿•°•——————•
ஓரு ஓட்டாங்கன்னிக்கு
ஒரு ஊளைச்சத்தம் இடு ..
ஐஸ் பார் ரெடி ( கண்ணாமூச்சி ) விளையாட்டின் போது ஒளிஞ்சுக் கொண்டிருப்பவர் இருக்கும் இடத்தை அறிவதற்கா தேடுபவர்
கேட்க ஒளிஞ்சுக்கொண்டிருப்பவர்
ஊஊஊஊ...என்று ஊளையிடுவார்..
•——————•°•✿•°•——————•
அத்தினி பித்திலி
மக்கான் சொக்கான்
பால் பறங்கி
ராட்டனம் பூட்டனம்
சீ சல் ஓடிப்போ..
•——————•°•✿•°•——————•
குலை குலையா முந்திரிக்கா..!
நிறைய நிறைய சுத்திவா..!
ஓட்டு மேல ஏறுவேன்..!
ஈட்டியால குத்துவேன்..!
பச்சரிசியை தின்பேன்..!
பல்ல உடைப்பேன்..!
புழுங்க அரிசியை தின்பேன்..!
புதுப்பல்ல உடைப்பேன்..!
கப்பலடி கப்பல் ..!
தூத்தூக்குடி கப்பல் ...!
குலை குலையா முந்திரிக்கா..!
நரியே நரியே சுத்திவா..!
கொள்ளை அடிச்சவன் எங்கே இருக்கான்..!
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!
•——————•°•✿•°•——————•
இரு சிறுவர்கள் கைகளை விரல்களால் கோத்துக் கொண்டு நிற்பார்கள். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று ரயில் போல நின்று கொண்டு
“ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்..
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததாம்..
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலு பூ பூத்ததாம் .
அஞ்சி குடம் தண்ணி ஊத்தி
அஞ்சி பூ பூத்ததாம் .
ஆறுகுடம் தண்ணி ஊத்தி
ஆறு பூ பூத்ததாம் .
ஏழு குடம் தண்ணி ஊத்தி
ஏழு பூ பூத்ததாம் .
எட்டு குடம் தண்ணி ஊத்தி
எட்டு பூ பூத்ததாம் .
ஓன்பது குடம் தண்ணி ஊத்தி
ஓன்பது பூ பூத்ததாம் .
பத்து குடம் தண்ணி ஊத்தி
பத்தே பூ பூத்ததாம்"
என்று உள்ளே நுழைந்து வரும் பொழுது கைகோர்த்து நிற்கும் சிறுவர்கள் கடைசியில் வருபவனைக் கைக்குள் அடக்கி விடுவார்கள். கடைசிப் பையன் சிறையில் இருப்பது போல் இருப்பான். மற்றவர்கள் சேர்ந்து,சிறைபிடித்து வைத்த சிறுவர்களிடம்,தலைவன் சென்று
"இம்புட்டு பணம் தரோம்
விடுடா துலுக்கா"
என்று காலிலிருந்து தலைவரை கூட்டுவார்கள்.
சிறைபடுதியவர்கள்
"விடமாட்டோம் மலுக்கா"
என்று பாடுவார்கள்.
பணத்திற்குப் பதில் "இம்புட்டு நகை தரோம் விடுடா துலுக்கா" என்பர். சிறைபடுதியவர்கள் "விடமாட்டோம் மலுகா" என்பார்கள். கடைசியாக
"ராஜா மகளைக் கட்டித் தரோம் விடுடா துலுக்கா"
என்று பாடியதும்
"விடுறோம் மலுக்கா"
என்பார்கள் .
சிறைபட்டிருப்பவரிடம் அலுக்கா , குலுக்கா என் கேட்க அவர் அலுக்கு என்றால் அங்கும் இங்குமாக அலுக்கியும், குலுக்கு வேண்டும் என்றால் மேலும் கீழுமாக குலுக்கி விடுவித்து விடுவார்கள்.
•——————•°•✿•°•——————•
உச்சரிப்பை திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவாகச் சொல்லி பழகவேண்டும் அவற்றுள் ர , ற கரங்களும் , ன,ண கரங்களும் , ல,ள,ழ கரங்களும் விரவி வரும். விரைவாகவும் , சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும் .
ஓடுகிற நரியில ஒரு நரி சிறுநரி,
சிறுநரி முதுகில ஒரு பிடி நரைமயிர்.
( திரும்ப திரும்ப)
கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது.
தத்தளிக்குது தாளம் போடுது
•——————•°•✿•°•——————•
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு..
•——————•°•✿•°•——————•
மொட்டைப் பாப்பாத்தி,
ரொட்டி சுட்டாளாம்
எண்ணெய் இல்லையாம்
கடைக்குப் போனாளாம்
காசு பத்தலயாம்
கடைக்காரனைப் பார்த்து
கண்ணடிச்சாளாம்!
•——————•°•✿•°•——————•
குத்தடி குத்தடி சைலக்கா..
குனிஞ்சி குத்தடி சைலக்கா..
பந்தலிலே பாவக்காய்..
தொங்குதடி லொலாக்கு..
பையன் வருவான் பாத்துக்கோ.
பணம் தருவான் வாங்கிக்கோ..
சில்லறைய மாத்திக்கோ..
சிலுக்கு பையிலபோட்டுக்கோ..
•——————•°•✿•°•——————•
அண்டா கொப்பறை அடித்தால் வெங்கணை..
பத்துரூவா பசுமாடு அதுக்கேத்த பச்ச புல்லு.
டூண், டூண் துப்பாக்கி போலிஸ்காரன் பொண்டாட்டி..
அஞ்சுரூவா ஆட்டுக்குட்டி அதுக்கேத்த ஆலங்கொழை ..
துட்டு பெட்டி திறந்தால் வெள்ளி ..
அம்மாவாசை அடுப்புல தோசை...
அத்தினி பித்திலி
மக்கான் சொக்கான்
பால் பறங்கி
ராட்டனம் பூட்டனம்
சீ சல் ஓடிப்போ..
•——————•°•✿•°•——————•
குலை குலையா முந்திரிக்கா..!
நிறைய நிறைய சுத்திவா..!
ஓட்டு மேல ஏறுவேன்..!
ஈட்டியால குத்துவேன்..!
பச்சரிசியை தின்பேன்..!
பல்ல உடைப்பேன்..!
புழுங்க அரிசியை தின்பேன்..!
புதுப்பல்ல உடைப்பேன்..!
கப்பலடி கப்பல் ..!
தூத்தூக்குடி கப்பல் ...!
குலை குலையா முந்திரிக்கா..!
நரியே நரியே சுத்திவா..!
கொள்ளை அடிச்சவன் எங்கே இருக்கான்..!
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!
•——————•°•✿•°•——————•
இரு சிறுவர்கள் கைகளை விரல்களால் கோத்துக் கொண்டு நிற்பார்கள். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று ரயில் போல நின்று கொண்டு
“ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்..
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததாம்..
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலு பூ பூத்ததாம் .
அஞ்சி குடம் தண்ணி ஊத்தி
அஞ்சி பூ பூத்ததாம் .
ஆறுகுடம் தண்ணி ஊத்தி
ஆறு பூ பூத்ததாம் .
ஏழு குடம் தண்ணி ஊத்தி
ஏழு பூ பூத்ததாம் .
எட்டு குடம் தண்ணி ஊத்தி
எட்டு பூ பூத்ததாம் .
ஓன்பது குடம் தண்ணி ஊத்தி
ஓன்பது பூ பூத்ததாம் .
பத்து குடம் தண்ணி ஊத்தி
பத்தே பூ பூத்ததாம்"
என்று உள்ளே நுழைந்து வரும் பொழுது கைகோர்த்து நிற்கும் சிறுவர்கள் கடைசியில் வருபவனைக் கைக்குள் அடக்கி விடுவார்கள். கடைசிப் பையன் சிறையில் இருப்பது போல் இருப்பான். மற்றவர்கள் சேர்ந்து,சிறைபிடித்து வைத்த சிறுவர்களிடம்,தலைவன் சென்று
"இம்புட்டு பணம் தரோம்
விடுடா துலுக்கா"
என்று காலிலிருந்து தலைவரை கூட்டுவார்கள்.
சிறைபடுதியவர்கள்
"விடமாட்டோம் மலுக்கா"
என்று பாடுவார்கள்.
பணத்திற்குப் பதில் "இம்புட்டு நகை தரோம் விடுடா துலுக்கா" என்பர். சிறைபடுதியவர்கள் "விடமாட்டோம் மலுகா" என்பார்கள். கடைசியாக
"ராஜா மகளைக் கட்டித் தரோம் விடுடா துலுக்கா"
என்று பாடியதும்
"விடுறோம் மலுக்கா"
என்பார்கள் .
சிறைபட்டிருப்பவரிடம் அலுக்கா , குலுக்கா என் கேட்க அவர் அலுக்கு என்றால் அங்கும் இங்குமாக அலுக்கியும், குலுக்கு வேண்டும் என்றால் மேலும் கீழுமாக குலுக்கி விடுவித்து விடுவார்கள்.
•——————•°•✿•°•——————•
உச்சரிப்பை திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவாகச் சொல்லி பழகவேண்டும் அவற்றுள் ர , ற கரங்களும் , ன,ண கரங்களும் , ல,ள,ழ கரங்களும் விரவி வரும். விரைவாகவும் , சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும் .
ஓடுகிற நரியில ஒரு நரி சிறுநரி,
சிறுநரி முதுகில ஒரு பிடி நரைமயிர்.
( திரும்ப திரும்ப)
கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது.
தத்தளிக்குது தாளம் போடுது
•——————•°•✿•°•——————•
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு..
•——————•°•✿•°•——————•
மொட்டைப் பாப்பாத்தி,
ரொட்டி சுட்டாளாம்
எண்ணெய் இல்லையாம்
கடைக்குப் போனாளாம்
காசு பத்தலயாம்
கடைக்காரனைப் பார்த்து
கண்ணடிச்சாளாம்!
•——————•°•✿•°•——————•
குத்தடி குத்தடி சைலக்கா..
குனிஞ்சி குத்தடி சைலக்கா..
பந்தலிலே பாவக்காய்..
தொங்குதடி லொலாக்கு..
பையன் வருவான் பாத்துக்கோ.
பணம் தருவான் வாங்கிக்கோ..
சில்லறைய மாத்திக்கோ..
சிலுக்கு பையிலபோட்டுக்கோ..
•——————•°•✿•°•——————•
அண்டா கொப்பறை அடித்தால் வெங்கணை..
பத்துரூவா பசுமாடு அதுக்கேத்த பச்ச புல்லு.
டூண், டூண் துப்பாக்கி போலிஸ்காரன் பொண்டாட்டி..
அஞ்சுரூவா ஆட்டுக்குட்டி அதுக்கேத்த ஆலங்கொழை ..
துட்டு பெட்டி திறந்தால் வெள்ளி ..
அம்மாவாசை அடுப்புல தோசை...
கத்தரிக்கா காசுமால கடவுள் தந்த பூமாலை.
கன்னா கருப்பட்டி கடைக்கு போனா தீப்பெட்டி
•——————•°•✿•°•——————•
டொக் டொக்...
யாரது ? திருடன் ...
என்ன வேண்டும் ? நகை வேண்டும் ..
என்ன நகை ? கலர் நகை ...
என்ன கலர் ?? மஞ்சள் கலர் ...
( எந்த கலரை வேண்டும் என்றாலும் குறிப்பிடலாம் )
அந்தகலரை அனைவரும் ஓடிச்சென்று தொடவேண்டும் தொடாதவர் அவுட் செய்யப்படுவார்.
•——————•°•✿•°•——————•
வேர் வேர்
என்ன வேர் ? வெட்டி வேர் ..
என்ன வெட்டி ? விறகு வெட்டி ..
என்ன விறகு ? மர விறகு ..
என்ன மரம் ? பனை மரம் ..
என்ன பனை ? தாளிப்பனை ..
என்ன தாளி ? விருந்தாளி.
என்ன விருந்து ? மணவிருந்து.
என்ன மணம் ? பூமணம்.
என்ன பூ? மாம்பூ.
என்ன மா? அம்மா,
•——————•°•✿•°•——————•
பொங்கலோ பொங்கல்
என்ன பொங்கல் – சக்கரப் பொங்கல்
என்ன சக்கரை – நாட்டு சக்கரை
என்ன நாடு – வட நாடு
என்ன வட – ஆமை வட
என்ன ஆமை – குளத்தாமை
என்ன குளம் – திரி குளம்
என்ன திரி ? விளக்கு திரி
என்ன விளக்கு ? குத்து விளக்கு
என்ன குத்து?
கும்மாங்குத்து. 👊👊👊
என்று கூறிக்கொண்டே எதிரே இருப்பவர் வயிற்றில் ஒரு குத்து விடுவோம்.
•——————•°•✿•°•——————•
விக்கி இராஜேந்திரன். ✍️✍️✍️
Super vicky
ReplyDeleteSuper
Deleteஅருமை அண்ணா ❤️👌🏻
ReplyDeleteநன்றி..
DeleteSuper dear
ReplyDeleteநன்றி
Delete