குழந்தை இலக்கியம்
"முடிவற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் கூடுகின்றன . எல்லையற்ற ஆகாயம் மேலே சலனமற்று இருக்கிறது . முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொணடும் ஆனந்தக் கூத்தாடிக் கொணடும் குழந்தைகள் கூடுகின்றன. குழந்தைகள் தங்கள் வீடுகளை மணலினால் கட்டுகின்றன; வெறும் சிப்பிகளை வைத்துக்கொண்டு விளையாடுகின்றன; உலர்ந்த சருகுகளைக் கொண்டு ஓடம் முடைகின்றன ; அகண்ட ஆழ்ந்த கடலிலே ஆனந்தமாக அவற்றை மிதக்க விடுகின்றன. " - தாகூர் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று அனைவரும் எண்ணி எண்ணி மகிழும் நம் குழந்தை பருவத்தை போல இப்போது இருக்கும் குழந்தைகளின் நிலை இல்லை என்றே நினைக்கின்றேன் கொட்டாங்குச்சி, பட்டம் , ஓலை காத்தாடி, களிமண்ணு, பால்சிப்பி,பானை சட்டி , உடைமரப் பூ, ஊமத்தம்பூ, பொய் கடுகு , பனங்காய் , தென்னை மட்ட, வாழைதண்டு ,பொடி தட்டை, சீகரெட் அட்டை , தீப்பெட்டி மட்டி , தகர டப்பா , பட்டுப்பூச்சி, தட்டான்பூச்சி , தண்ணிப்பாம்பு, தாவும் தவளை , காட்டுச்செடி, காக்கா முட்டை , ஓணான், அணில் கூடு , கொக்கு குஞ்சி , ஓடை நத்தை , வயல் வரப்பு , தோட்டம...