அகத்தின் அழகு..
சுத்தத்திற்கு பெயர் வாங்கிய சிங்கப்பூரில், அப்பொழுது தான் மெதுவாக விழித்துக்கொண்டிருந்த காரைகட்டிங்களுக்கு நடுவே அமைந்திருந்த, காலாங் நதிக்கரை நடைபாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் . சிலமாதங்களாக கிட்டத்தட்ட தினமும் பெய்த மழையினால் பாதையின் இருபக்கமும் வளர்ந்திருந்த பசுமை புற்கள் தாடியை டிரிம் செய்தது போல ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மரங்கள் சிலவற்றுக்கு காற்றினால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க அவைகளின் தலைக்கணத்தை குறைக்க சம்மர் கட்டிங் செய்ப்பட்டிருந்தது. அடர்ந்த கருத்த தலைமுடிகள் நடுவே தோன்றும் வெள்ளை நரைகளை போல பசுமையான இலைகளுக்கு நடுவே ஆங்காங்கே பழுத்த இலைகள் பளிச்சிட்டன.. என் காதில் மாட்டிய இயர்போனில் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி ஒலிப்புத்தகம் மூன்றாவது முறையாக ஒலித்துக்கொண்டிருந்தது.. அதில் அழிந்து போன பல குடிகளின் அடைக்களமாக இருந்த பாரியின் பறம்பு மலையில் நடந்து கொண்டிருந்த, கொற்றவை கூத்தில் மதங்கனின் பெரும் பறையிசை நடுவே அகுதை குலத்தின் கடைசி வாரிசான நீலன் தீடீரென குதித்து வெறியேறி ஆடத்தொடங்கின...