பெய்யென பெய்த மழை.

    வெகுநாட்களுக்கு பிறகு , எனது ஊரில் இன்று நல்ல மழை பொழிந்திருக்கின்றது ,  வசந்தத்தை வரவேற்கும் வீதமாக, இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை எனது ஊர் மண்ணை குளிர்ச்சிபடுத்தி இருக்கிறது. 

மனது குளிர்ந்ததடா கண்ணே !! 
என்று "மனோகரா " படத்தில் ஒரு வசனம் வரும். அது போல எங்க ஊர் மண்ணோட சேர்ந்து என் மனமும் குளிர்ந்து போச்சு .

   இந்த வருடம் மழை பொய்த்ததால் பூமி வறண்டு போனது , அக்னி வெயில் முடிந்து இரண்டு மாதங்களாகியும் வெக்கை குறையவில்லை , ஆற்றிலும் , ஊற்றிலும் தண்ணீர் இல்லாமல் மரங்கள் வாடி வதங்க தொடங்கியது. அதன் தாக்கம் வீட்டிலும் அடிக்கத் ஆரம்பித்தது... 

   முன்பெல்லாம் என் மனைவியை வேடிக்கையாக சீண்டுவதற்காக , அவர் பிறந்த ஊரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன் . 
" எங்க ஊரப்பாரு அந்த பக்கம் வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு ,  

இந்த பக்கம் நீர் நிறைந்திருக்கும் குளத்தை பாரு, 

பத்து அடி பள்ளம் தோண்டுனா பொங்கி வரும் ஊத்தைப் பாரு , 

வாய் கொப்பளிப்பதற்கே பெரிய வாய்காலு,

ஊரை சுற்றிலும் தோட்டம் ,  எங்கு கட்டிலை போட்டு விட்டத்தை பார்த்தாலும் கண்ணை சொக்கும் தூக்கம் "

அப்படின்னு டி.ஆர் மாதிரி எதுகை மோனையில் பேசி , உங்க ஊரும் இருக்கே என்று எகத்தாளமாக பேசி தோடு நிக்காம.. 

"குறிஞ்சியும் முல்லையும் , 
முறமையில் திரிந்த , 
சென்னையில் பிறந்தவளுக்கு, 
பிறந்தநாள் வாழ்த்துகள் " ... 

என்று அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கவிதை வேற எழுதி கொடுத்து , அவங்க ஊரும் பாலைவனம் மாதிரி தான்னு அளவுக்கு அதிகமா அளப்பறை பண்ணிக்கிட்டுருந்தேன்.. 

ஆன கடந்த ஒரு வருடமாக நிலமை தலைகீழாக மாறிப்போச்சி.. 
என்னை வீட்டில் வைச்சி செஞ்சாங்க.. 

" சென்னையில் கொட்டி தீர்த்த மழை " அப்படின்னு செய்தியில் வந்தாலோ! 
தமிழ்நாட்டின் பிறமாவட்டங்களில் மழை பெய்ததாக தொலைகாட்சியில் காட்சி ஓடினாலோ.. 
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை , உலகத்தில் ஏதாவது ஓரு மூலையில் மழை பெய்தாலும்,  
அன்னைக்கு என் கதி அதோ கதிதான் .. 

ஊராங்க இது வெளியே போக முடியுதா.. உடம்பில் நெருப்பு பட்ட மாதிரி எரியுது.. 
இந்தா இருக்கிற தூத்துக்குடியில் பெய்கிறது, திருச்செந்தூரில் பெய்கிறது . அவ்வளவு ஏன் பக்கத்தில் இருக்கிற ஆறுமுகநேரியில் கூட தூருகின்றது. இங்க உங்க ஊர்ல ஒரு சொட்டு கூட விழவில்லை.. 
" It's like a desert" 
என் மனைவி பேசும் போது ஆங்கிலம் வந்தா அம்மணி செம கடுப்புல இருக்காங்கன்னு அர்த்தம்..
பத்தாதுன்னு என் மகளும் அவங்க கூட கூட்டு.. 
இவங்க "புன்னைசாத்தான்குறிச்சி" 
அப்படின்னு சொல்ல.. 
வாண்டு "பாலைவனம் " என்று முழக்கமிடும்.. 

எது எப்படி இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரை எப்படி விட்டு கொடுப்பது.. 
தினமும் வானிலை அறிக்கையை பார்க்க ஆரம்பித்தேன்.. எதாவது மேகம் நம்ம ஊர் பக்கம் எட்டிபார்க்கின்றதா என்று ..அப்படி எதாவது தெரிந்தால் .. 
 நான் அவர்களிடம், 
" இன்னைக்கு பாரு மழை கொட்டோ கொட்டோ என்று கொட்ட போகுது " என்க அவர் நக்கலாக, 

" நான் தான் உங்க தலையில் கொட்டனும் , மழையெல்லாம் கொட்டாது. என்பார்.. 
சொன்னதோடு இல்லாமல் 
அன்னைக்கு துணியை துவைத்து காயப்போட்டு எடுத்தும் விடுவார்.. 
அவருக்கு எங்க ஊரில் மழை பெய்யாது என்று அவ்வளவு நம்பிக்கை .. 
" இந்த உலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவருக்காக, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்யுமாமே மழை " 

உலகம் முழுக்க பெய்யவேண்டாம் , எங்க ஊர்ல கொஞ்சம் பெய்தாலும் போதும் என்று நான் தினம் தினம் ஏங்க ஆரம்பித்தேன்.. 

இதோ இன்று கொட்டி தீர்ந்துவிட்டது மழை .. 
எந்த நல்லவர்  பொருட்டு இன்று இந்த மழை பொழிந்தது என்று எனக்கு தெரியாது .. 
ஆனால் அந்த நல்லவர் நூற்றாண்டு காலம் நல்லா இருக்கனும் என்று மனமார வேண்டிக்கிறேன்...

- விக்கி இராஜேந்திரன். ✍️✍️✍️

Comments

  1. Super vicky எதார்த்தமான வரிகளோடு உண்மையாண உரையாடலோடு செம சூப்பர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்