பெய்யென பெய்த மழை.
வெகுநாட்களுக்கு பிறகு , எனது ஊரில் இன்று நல்ல மழை பொழிந்திருக்கின்றது , வசந்தத்தை வரவேற்கும் வீதமாக, இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை எனது ஊர் மண்ணை குளிர்ச்சிபடுத்தி இருக்கிறது. மனது குளிர்ந்ததடா கண்ணே !! என்று "மனோகரா " படத்தில் ஒரு வசனம் வரும். அது போல எங்க ஊர் மண்ணோட சேர்ந்து என் மனமும் குளிர்ந்து போச்சு . இந்த வருடம் மழை பொய்த்ததால் பூமி வறண்டு போனது , அக்னி வெயில் முடிந்து இரண்டு மாதங்களாகியும் வெக்கை குறையவில்லை , ஆற்றிலும் , ஊற்றிலும் தண்ணீர் இல்லாமல் மரங்கள் வாடி வதங்க தொடங்கியது. அதன் தாக்கம் வீட்டிலும் அடிக்கத் ஆரம்பித்தது... முன்பெல்லாம் என் மனைவியை வேடிக்கையாக சீண்டுவதற்காக , அவர் பிறந்த ஊரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன் . " எங்க ஊரப்பாரு அந்த பக்கம் வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு , இந்த பக்கம் நீர் நிறைந்திருக்கும் குளத்தை பாரு, பத்து அடி பள்ளம் தோண்டுனா பொங்கி வரும் ஊத்தைப் பாரு , வாய் கொப்பளிப்பதற்கே பெரிய வாய்காலு, ஊரை சுற்றிலும் தோட்டம் , எங்கு...