" நாய்குட்டி ..
கிளைகள் பரப்பி பசுமை விரித்து படர்ந்திருந்த அந்த பெரிய புளியமரம் , அந்த கிழவியின் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்தது. புளியமரத்தின் கிளைகளில் கொக்குகள் பல கூடுகட்டி முட்டையிட்டு இருந்தது ,சில கூடுகளில் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்து கத்திக்கொண்டிருந்தன . அந்த மரத்தின் அடிவாரத்தில் நான்கு கவக்கம்பு அடித்து , பனை வளையை சதுரமாக வைத்து அதன் மேல் அவுத்தி , சவுக்கு மரத்துண்டுகளையும் பனை , தென்னை மட்டைகளையும் வைத்து அடுக்கப்பட்டிருந்த விறகு கூடத்தின் அடியில் தான் அந்த தெருவை சுற்றும் தெரு நாய் செவப்பி சிறிய பள்ளம் தோண்டி , அதில் என்னுடன் சேர்த்து ஐந்து பேரை பெத்து போட்டிருந்தால்..நாங்கள் ஐந்து பேரும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தோம்.. நாங்கள் இருந்த இடத்தை சுற்றி தென்னங்கிடுவை வைத்து அடைத்து வேலி போடப்பட்டிருந்தது . அந்த கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன , அவற்றிற்கு தோட்டத்தின் அருகிலேயே , கிழவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பொது கிணற்றில் இருந்து வெளியேற...