மகளுக்கு ஓர் மடல் !!

அன்புள்ள மகளுக்கு - அப்பா எழுதும் மடல் .. 
என்னை மன்னிக்கவேண்டும் மகளே ! 
      உன்னை தாமிரபரணி நீராடவும்.. 
வயல் இறங்கி வயல் நண்டு பிடிக்கவும் , நாற்றங்கால் நாற்றை பிடுங்கி வயல் பரவ நடவும், ஊத்தான் குத்தி ஓடும் மீன் பிடிக்கவும் .. மரம் ஏறி அணில் குஞ்சு எடுக்கவும் .. கண்ணி வைத்து பறவை பிடிக்கவும் ... ஓணான் பிடித்து தாத்தாவின் மூக்கு பொடி போட்டு விளையாடவும்.. தட்டான் பிடிக்கவும்.. வயல்வெளிகளின் வேலிகளிலும்,மரங்களிலும் தேனீக்கள் வைத்திருந்த தேனை எடுத்து சாப்பிட்டவும் , வேப்பம் மரம் ஏறி வேப்பம் பழம் சாப்பிடவும். புளியமரம் ஏறி புளியம்பழம் உழுப்பவும்.. ஆறு , கிணறு களில் வளரும் பால் சிப்பியை எடுத்து வந்து கண்ணாடி போல் பட்டைதீட்டி அவற்றில் மெழுகை வைத்து அடைத்து ஆற்று மணலில் வழுக்கும் தடம் அமைத்து பந்தையம் விட்டவும் , குளத்தில் இருந்து கரம்பல் மண் எடுத்து வந்து பைதா ( சக்கரம் ) செய்து உருட்டி விளையாடவும் , கோலிக்கா அடிக்கவும் , பம்பரம் சுற்றவும் , பட்டம் விடவும் , கில்லி அடிக்கவும் , பிள்ளையார் பந்து விளையாடவும் , காத்தாடி சுற்றவும் , நுங்கு வண்டி ஓட்டவும் , பணம் பழம் சுடவும், பணங்கிழங்கு நடவும்.. வயலில் உழுந்து விதைக்கவும், உழுந்து நெத்தை பறித்து வந்து வெயிலில் காயவைத்து அடித்து பிரிக்கவும்.. நெற்களத்தில் நெல் அடிக்கவும் .. நெல்லை அவித்து காயவைத்து அரிசியாக்கவுமாக இயற்கையோடு நான் வாழ்ந்த வாழ்க்கையை கற்றுதராமல்.. 

எனக்கு கிடைக்காததை எல்லாம் உனக்கு கொடுக்க நினைத்து ... பொருள் தேடும் பயணத்தில்.. எனக்கு கிடைத்ததை உனக்கு கொடுக்க மறந்துவிட்டேன்....
மன்னிப்பாயா மகளே !! 

அன்புடன் அப்பா ..
விக்கி இராஜேந்திரன். ✍️✍️✍️✍️

Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்