Posts

Showing posts from 2023

எங்க ஊர் பெரிய வாய்க்கால்

Image
தமிழ்நாடு வெப்ப மண்டலத்தின் பகுதியாகும் . அதன் காரணமாக தமிழர்கள் நீராடும் வேட்கையுடையவர்கள் . சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் கண்மாய்களிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் குளித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர். சைவ , வைணவ பெருஞ்சமய நெறிகள் கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளை தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஓன்று நீராடல் ஆகும் , வெப்பமண்டல மனிதர்களை போலவே அவர்கள் வழிபடும் சிவன் , திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளி(ர்)க்கின்றன.                      'குளித்தல்' என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும் . குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள் ; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல் ' என்பதே அதன் பொருளாகும் . 'குளிர்த்தல் ' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம்.     தமிழகத்தில் பெரும்பான்மையான உழைக்கும்...

நடையில் பயின்றது..

Image
உடல் எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யுங்கள் , இல்லையென்றால் உடல்நிலையில் தேவையற்ற தொந்தரவுகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என்ற மருத்துவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக கைப்பேசியில் அலாரம் வைத்து அதிகாலை 7 மணிக்கெல்லாம் பாதி தூக்கத்தில் விழித்து , வாக்கிங் போவதற்க்கென வாங்கி வைத்திருந்த ஷூவை எடுத்தேன், அது பதிமூன்றாம் நம்பர் வீடு என்ற பேய் படத்தில் வரும் பாதாள அறையை அப்போது தான் திறப்பது போன்று ஓட்டடையும் தூசுமாக இருந்தது .. அதை எடுத்து வேண்டா வெறுப்பாக கஷ்டப்பட்டு துடைப்பதற்குள் நன்கு வியர்த்து விட , ஆகா இதுவே பத்தாயிரம் காலடிகள் நடந்துபோல இருக்கே, இதுக்கு மேல் எதற்கு நடக்க வேண்டும் , தினமும் ஷூவை எடுத்து நன்றாக துடைத்தாலே போதும் போலவே , இதுவே பெரிய உடற்பயிற்சியாக இருக்கு இதற்கு மேல் எதுக்கு நடைபயிற்சி என்று மனது அலைபாயந்த போது... சோம்பேறி ... சோம்பேறி என்றது உள்மனது, என்னை விட அதுக்கு தான் என் உடல்நலனை காப்பதில் அக்கறை அதிகம்..  சரி.. சரி .. திட்டாதே என்று உள்மனதை சமாதனபடுத்திக்கொண்டு ..  வேண்டா வெறுப்பாக ஷூவை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் சில்ல...

பெய்யென பெய்த மழை.

Image
    வெகுநாட்களுக்கு பிறகு , எனது ஊரில் இன்று நல்ல மழை பொழிந்திருக்கின்றது ,  வசந்தத்தை வரவேற்கும் வீதமாக, இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை எனது ஊர் மண்ணை குளிர்ச்சிபடுத்தி இருக்கிறது.  மனது குளிர்ந்ததடா கண்ணே !!  என்று "மனோகரா " படத்தில் ஒரு வசனம் வரும். அது போல எங்க ஊர் மண்ணோட சேர்ந்து என் மனமும் குளிர்ந்து போச்சு .    இந்த வருடம் மழை பொய்த்ததால் பூமி வறண்டு போனது , அக்னி வெயில் முடிந்து இரண்டு மாதங்களாகியும் வெக்கை குறையவில்லை , ஆற்றிலும் , ஊற்றிலும் தண்ணீர் இல்லாமல் மரங்கள் வாடி வதங்க தொடங்கியது. அதன் தாக்கம் வீட்டிலும் அடிக்கத் ஆரம்பித்தது...     முன்பெல்லாம் என் மனைவியை வேடிக்கையாக சீண்டுவதற்காக , அவர் பிறந்த ஊரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன் .  " எங்க ஊரப்பாரு அந்த பக்கம் வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு ,   இந்த பக்கம் நீர் நிறைந்திருக்கும் குளத்தை பாரு,  பத்து அடி பள்ளம் தோண்டுனா பொங்கி வரும் ஊத்தைப் பாரு ,  வாய் கொப்பளிப்பதற்கே பெரிய வாய்காலு, ஊரை சுற்றிலும் தோட்டம் ,  எங்கு...

" நாய்குட்டி ..

Image
                  கிளைகள் பரப்பி பசுமை விரித்து படர்ந்திருந்த அந்த பெரிய புளியமரம் ,  அந்த கிழவியின் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்தது. புளியமரத்தின் கிளைகளில் கொக்குகள் பல கூடுகட்டி முட்டையிட்டு இருந்தது ,சில கூடுகளில் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்து கத்திக்கொண்டிருந்தன . அந்த மரத்தின் அடிவாரத்தில் நான்கு கவக்கம்பு அடித்து , பனை வளையை சதுரமாக வைத்து அதன் மேல் அவுத்தி , சவுக்கு மரத்துண்டுகளையும் பனை , தென்னை மட்டைகளையும் வைத்து  அடுக்கப்பட்டிருந்த விறகு கூடத்தின் அடியில் தான் அந்த தெருவை சுற்றும் தெரு நாய் செவப்பி சிறிய பள்ளம் தோண்டி , அதில் என்னுடன் சேர்த்து  ஐந்து பேரை பெத்து போட்டிருந்தால்..நாங்கள் ஐந்து பேரும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தோம்..  நாங்கள் இருந்த இடத்தை சுற்றி தென்னங்கிடுவை வைத்து அடைத்து வேலி போடப்பட்டிருந்தது .  அந்த கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன , அவற்றிற்கு  தோட்டத்தின் அருகிலேயே , கிழவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பொது கிணற்றில் இருந்து வெளியேற...

மகளுக்கு ஓர் மடல் !!

Image
அன்புள்ள மகளுக்கு - அப்பா எழுதும் மடல் ..  என்னை மன்னிக்கவேண்டும் மகளே !        உன்னை தாமிரபரணி நீராடவும்..  வயல் இறங்கி வயல் நண்டு பிடிக்கவும் , நாற்றங்கால் நாற்றை பிடுங்கி வயல் பரவ நடவும், ஊத்தான் குத்தி ஓடும் மீன் பிடிக்கவும் .. மரம் ஏறி அணில் குஞ்சு எடுக்கவும் .. கண்ணி வைத்து பறவை பிடிக்கவும் ... ஓணான் பிடித்து தாத்தாவின் மூக்கு பொடி போட்டு விளையாடவும்.. தட்டான் பிடிக்கவும்.. வயல்வெளிகளின் வேலிகளிலும்,மரங்களிலும் தேனீக்கள் வைத்திருந்த தேனை எடுத்து சாப்பிட்டவும் , வேப்பம் மரம் ஏறி வேப்பம் பழம் சாப்பிடவும். புளியமரம் ஏறி புளியம்பழம் உழுப்பவும்.. ஆறு , கிணறு களில் வளரும் பால் சிப்பியை எடுத்து வந்து கண்ணாடி போல் பட்டைதீட்டி அவற்றில் மெழுகை வைத்து அடைத்து ஆற்று மணலில் வழுக்கும் தடம் அமைத்து பந்தையம் விட்டவும் , குளத்தில் இருந்து கரம்பல் மண் எடுத்து வந்து பைதா ( சக்கரம் ) செய்து உருட்டி விளையாடவும் , கோலிக்கா அடிக்கவும் , பம்பரம் சுற்றவும் , பட்டம் விடவும் , கில்லி அடிக்கவும் , பிள்ளையார் பந்து விளையாடவும் , காத்தாடி சுற்றவும் , ...

மத அரசியலும் , பாசிசமும் - 2

Image
ஒரே நாடு , ஒரே மொழி என்று நமக்கு தேசபக்தி பாடம் எடுப்பதெல்லாம் , மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் இருக்கும் ஒரு சிறு இனகூட்டத்தின் மொழி , பண்பாடு , முக்கியமாக அவர்கள் அதிகாரத்தை அடைவதற்கு உருவாகிய கடவுள் வழிபாடு போன்றவற்றை அவற்றை பின்பற்றாத மற்ற மொழி , பண்பாடு , வழிபாட்டு முறைகள் மீது திணித்து , அடையாளமற்ற அவர்களின் அடையாளங்களை அனைத்து இடங்களிலும் நிரப்பி , இது அவர்களின் தேசம் என்று அடையாளம் காட்டவே அன்றி வேறில்லை .  பிற மதங்கள் இந்து மதத்தை அழிப்பதாக குற்றம் கூறும் யாவரும் , , இப்போது இந்துகளாக கருதப்படும் இவர்களுக்குள் முற்காலத்தில் நடந்த சைவ , வைணவ சண்டைகளால் ஏற்பட்ட உயிர்பலிகள் , சமணர்களை அழிக்க அவர்களை கழுவேற்றிய வரலாறுகள் , இந்த மண்ணில் தோன்றிய ஆசிவகத்தையும், பெளதத்தையும் அழித்த வரலாறுகளையும் இந்து என்ற பெயரே இந்தியாவில் உள்ள சமயங்களை இணைத்து ஆங்கிலேயன் வைத்த பெயர் அது என்பதையும் வசமாக மறந்து விடுகிறார்கள். சமஸ்கிருதம் மற்றும் வேத மொழியை எதிர்த்து தமிழ் மொழியை நிறுத்திய நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த மண்ணில் இப்போது கோவில்களில் இப்போது தமிழ் மட்டு...

காலம் ஒர் அற்புத ஆற்றல் மிக்க கருவி!

Image
அதிகாலையில் எழுந்து , வீட்டின் முற்றத்தில் அமைந்திருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற முத்துநாடார் , தொழுவத்தின் பரண் மேலிருந்த வைக்கோல் கட்டின் பிரியை சற்று தளர்த்தி இரு கைகள் நிறைய வைக்கோலை அள்ளி வந்து , மாட்டின் முன்னாலிருந்த சிறிய மூங்கில் தட்டியாலான அடைப்புக்குள் போட்டுவிட்டு , அருகில் இருந்த கழநீர் தொட்டிக்குள் , வீட்டில் இருந்த கழநீரோடு கொஞ்சம் தவிடையும் கலந்து வைத்து , முளைக்கம்பில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு தண்ணீர் காட்டிவிட்டு , தொழுவத்தை விட்டு வெளியே வந்து கை , கால்களை அழம்பி விட்டு , வீட்டின் முன் தாழ்வாரத்தில் இருந்த பெரிய திண்ணையில் தான் படுத்திருந்த பனைநார் கட்டிலில் வந்து அமர்ந்தார் .   தாழ்வாரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்களையில் இருந்து , ஒரு செம்பு குவளையில் நீராகாரத்தை எடுத்து அதில் சிறிது உப்பை போட்டு , கலக்கி கொண்டு வந்து குடுத்தார் அவரின் மனையாள் காசியம்மா....   செம்பு குவளையை கையில் வாங்கியவர் . குவளை வாயில் படாமல் அன்னாந்தவாறு இரண்டு மடக்கு நீராகாரத்தை வாயில் உற்றி , கையிலிருந்த கருப்பட்டியையு...

" சில்லறை வரம் "

Image
  அரசிடம் இருந்து தனியாருக்கு விற்க்கப்பட்ட அந்த விமானம்  எப்போதும் போல இரண்டு மணிநேரம் தாமதமாக நண்பகல் ஒரு மணியலவில் சென்னை மீனம்பாக்கம் விwமானநிலையத்தில் தரையிறங்கியது . பயணிகள் அனைவரும் அவசரம் , அவசரமாக தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு , ஓருவரை ஒருவர் முண்டியடித்துக் விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டிருந்தனர் . அவர்களை வேடிக்கை பார்த்தவாரே , எந்த ஒரு அவசரமும் இன்றி அமைதியாக விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்திருந்தேன் .   பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இரண்டு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு போய் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஊர் சென்னையில் இருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்தூக்குடி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறிய கிராமம் . இந்த பயணத்திற்கான திட்டங்கள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது.  சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் , தாம்பரம் இரயில் நிலையத்தில் சாயங்காலம் 4.30 மணிக்கு ஏறி , மறுநாள் காலை 7.30 க்கு , குரும்பூர் இரயில் நிலை...