கரும்பலகையில் வந்த காதலும் காயமும் ...
மதியம் இரண்டு மணிக்கு ,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ,திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முன்பக்க படிகட்டுக்கு அருகில் , இருவர் மட்டும் உட்காரும் சீட்டில் ஏறி அமர்ந்தான் முகிலன் . ஒரு அம்மா பஸ்ஸில் கூடை நிறைய மல்லிகை கொண்டு வந்து , முழம் இரண்டு ரூபாய் என்று விற்று கொண்டிருந்தார் . சிலர் அதை நல்ல வாசனையாக இருக்கு என்று வாங்கி கொண்டிருந்தனர். முகிலனுக்கோ மயக்கும் வாசனை கொண்ட அந்த மதுரை மல்லியின் வாசனை சிறிதும் தெரியவில்லை . அந்த மல்லிகை அவனுக்கு வாசனை அற்ற காகிதப் பூக்களாகத்தான் தெரிந்தது. சில வருடங்கள் முன்பு வரை அவன் இ வ்விதம் எந்த விதமான உணர்வுகளிலும் , உணர்ச்சிகளிலும் பற்றற்று இருந்ததில்லை , ஆனால் இப்போது இவ்வுலகமே அவனுக்கு சாதாரண காகித பூவாகத்தான் தெரிகிறது. இதோ டிரைவர் ஏறி அமர்ந்து கியரை மாற்றி ஆக்சிலேட்ரை மெதுவாக காலால் அழுத்த கரும்புகையை வெளியேற்றியவாறு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறி மதுரை சுற்றுச்சாலையை அடைந்து வேகம் பிடித்தது அந்த அரசுப்பேருந்து . அக்கினி வெயிலின் உக்கிரத்தில் உர...