" காதலே உன் காலடியில் "
"திருச்செந்தூர்" சூரனை வென்ற முப்பாட்டன் முருகனின் வீரத்திற்கு மட்டுமல்ல , காந்தர்வம் புரிந்து அன்னை வள்ளியை கவர்ந்த காதலுக்கும் பெயர் பெற்ற திருத்தலம் . தான்தோன்றிகளாக திரிந்தகுடிகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்த வேட்டுவர்குடி தலைமகன். குறிப்பறிந்து சொல்லும் குறவர்குடி தலைமகளின் மீது மையம் கொண்டு விவாகம் புரிந்த கதைகள் இன்னும் தமிழக மண்ணில் வள்ளி திருமண நாடகமாக தென்மாவட்டங்களின் கோவில் திருவிழாக்களில் நடைபெற்று வருகின்றன..
இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் .
பாலகனாக பாலமுருகனை பலமுறை தரிசித்தவன். .. இன்று இளம் குமரனான பிறகு. அதே கோவிலுக்கு பொழுதை குதூகலமாக கழிக்க எண்ணி , பாட்டனின் பாதத்தில் பட்டு பரவசமாகும் பரந்து விரிந்த நீீீலவண்ண வங்கக்கடலில் நீராட கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு தோழர்களுடன் வந்திருந்தான்,
நண்பர்கள் கவனிக்கவில்லை என்க .
"இல்லடா மச்சான் இங்க ஒரு பொண்ணு நின்னதுடா , நான் உங்களை பார்த்து கையசைத்த போது அவள் என்னை பார்த்து கையசைத்தால் . வெள்ளை நிறத்தில் பட்டு சைட்டையும் , பாவாடையும் அணிந்து இருந்தாள் . ஏதோ ஒரு தேவதையே என்னை பார்த்து கையசைத்து அழைத்தது போல் இருந்தது , அவளை நான் பார்க்க வேண்டும்" என்ற வேலனை பார்த்து .
இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் .
வேகமாக வீசும் காற்றின் ஜதிக்கு ஏற்றார்போல் நர்த்தனமாடி கொண்டிருந்த அலைகளை பார்க்கும் போதே வேலனுக்கு உடனே அதனுடன் சேர்ந்து ஆடத்தோன்றியது. நண்பர்களில் சிலர் மட்டும் கரையில் நிற்க . மற்றவர்களுடன் சேர்ந்து கடலில் குதித்து சுழற்றும் அலைகளை எதிர் கொண்டு உற்சாகமாக நீராடிக்கொண்டே , கரையில் நின்ற நண்பர்களை நோக்கி மகிழ்ச்சியாக கைகளை அசைத்தான் .
நண்பர்களும் பதிலுக்கு அவனை நோக்கி கையை அசைத்த போது , நண்பர்களை விட்டு சற்று தள்ளி நின்ற சிவப்பு , பச்சை , பவளம் என கலர் கலராக முத்துக்கள் பதித்த வளையள் அணிந்த கரம் ஒன்றும் அவனை நோக்கி கைகளை அசைத்ததை கவனித்தான் வேலன் .
அங்கே கரையை நோக்கி தவழ்ந்துவரும் அலைகளில் மருதானியில் சிவந்த கால்கள் கொஞ்சம் மண்ணில் அமிழ்ந்திருக்க . புதைந்திருந்த மண்ணுக்குளிருந்து வெளிவந்த வெண்சங்கு சிற்பம் போல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அழகிய நங்கையவளை கவனித்த வேலனின் இதயத்தை சூல்கருமேகத்தின் நடுவே தோன்றிய மின்னலேன , அந்த இளம் பூவிழியாலின் வேல்விழி தாக்கிற்று.
தெய்வ பெண்டிரோ தேவதையோ மேலுகத்து மேன்மகளோ மேனகையோ, மோகினியோ யாரிவள், எனை நோக்கி கைகாட்டி கண்காட்டி பண்காட்டி பவளவாய்நகைகாட்டுகின்றாள், என எண்ணிய மாத்திரத்தில் மனம்மெல்லாம் படபடக்க வேகவேகமாக கரைவந்து உடுப்புகளை மாற்றியவனின் கண்கள் அவளை தேட , அதற்குள் அந்த மைவிழியாலோ கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் மையத்திற்குள் சென்று மறைந்து போயிருந்தாள் .
பரபரப்பாக நண்பர்களிடம் வந்து
வேலன் கேட்டான்..
"மச்சான் இங்க ஒரு பொண்ணு நின்றதை பாத்திங்களா " என்றான்.
நண்பர்கள் கவனிக்கவில்லை என்க .
"இல்லடா மச்சான் இங்க ஒரு பொண்ணு நின்னதுடா , நான் உங்களை பார்த்து கையசைத்த போது அவள் என்னை பார்த்து கையசைத்தால் . வெள்ளை நிறத்தில் பட்டு சைட்டையும் , பாவாடையும் அணிந்து இருந்தாள் . ஏதோ ஒரு தேவதையே என்னை பார்த்து கையசைத்து அழைத்தது போல் இருந்தது , அவளை நான் பார்க்க வேண்டும்" என்ற வேலனை பார்த்து .
என்னடா கண்டதும் காதலா ! கடல் அருகில் நின்று கொண்டு கடலை போடுவதற்கு ஆள்தேடுறியா என கிண்டல் செய்ய,
" இல்லை மச்சான், அவளை நான் பார்த்த போது பலநாட்கள் பழகிய உறவை பார்த்தது போல் ஓர் உணர்வு " என்று உணர்ச்சிவசப்பட..
சரிடா கவலைபடாதே அவளை கண்டுபிடித்துவிடலாம். வா போய் தேடுவோம் என்று நண்பர்கள் அனைவரும் வேலனுடன் சேர்ந்து அந்த அழகியை தேடி கடற்கரை , நாழிக்கிணறு ,சண்முக விலாச மண்டபம், தெற்கு நுழை வாயில் , மேற்கு கோபுர வாசல் , வெளி சுற்று பிரகார மண்டபம் , வடக்கு நுழைவாயில் , சஷ்டி மண்டபம் என எங்கு தேடியும் அவர்களின் கண்களும் கால்களும் களைத்தனவே அன்றி அந்த பெண்ணை காணவில்லை . அவர்களின் நம்பிக்கை சற்று தளர்ந்த போது . நண்பன் ஒருவன் சொன்னான் வள்ளி குகை கோவிலுக்கு சென்றிருக்க வாய்ப்பிருக்கு வாங்க போய் பார்க்கலாம் என்றான். ஆம் அந்த ஒரு இடம் தான் அவர்கள் தேடி பார்க்காத இடம்.
வேலனின் முகத்தில் சொல்லன்னா சந்தோசம். அந்த பெண் நின்ற இடத்திற்கு அருகில் , நண்பர்களுடன் சென்று நின்று கொண்டே கடலை ரசிப்பது போல கன்னி அவளிடம் கண்சாடையில் பேச தொடங்கினான்! வேலன் .
" அடியே ! அழகே உன் வேல்விழியால் என்னை காயப்படுத்தி விட்டு , ஒரு சமாதானமும் கூறாமல் செல்வது சரியா ! நான் இங்கிருந்து உயிரோடு திரும்பவேண்டும் என நினைத்தால் , ஒரு நிமிடமேனும் உன்னோடு நான் பேச வேண்டும் என கண்களால் கெஞ்சி அழைத்தான் "
அது யானைகளை பழக்குவதிலும், கட்டுபடுத்துவதிலும் வல்லமை கொண்ட வேட்டுவர்குடி தலைமகன் முருகன் , வள்ளியை தன்வயப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்தார், தன் காதலை புரிந்து கொள்ளாமல் தன்னை உதாசீனப்படுத்தி செல்லும் வள்ளியை தன்வயப்படுத்த ஒரு தந்திரமும் செய்தார், வள்ளியை தன்னிடம் வரவழைக்க தான் பழக்கப்படுத்திய யானைகளை அனுப்பினார், யானைகளை கண்டு பயந்த அன்னை அவற்றிடம் இருந்த தப்பிக்க சந்தனமலை குன்றில் இருந்த மலைகுகைக்குள் சென்று பதுங்கி கொண்டார் . மலைகுகைக்குள் இருந்த அன்னை வள்ளியை யானைகளிடம் இருந்து காப்பாற்றுவது போல் சென்ற கந்தன், அன்னையின் மனதை கவர்ந்து பின் மணமுடித்தார். அந்த புனிதமான காதலின் சாட்சியாக இன்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு அருகிலே இருக்கிறது சந்தனமலை குன்றில் உள்ள வள்ளி குகை கோவில் .
. நண்பர்களுடன் அங்கு சென்ற வேலனின் கண்களில் தென்பட்டால் அந்த அழகிய தேவதை , அவள் அங்கு இருந்த தியானமண்டபத்தின் அருகில் குடும்பத்தினருடன் நின்று கொண்டு கடல் காற்றின் வேகத்தில் கலையும் கூந்தலை சரி செய்து கொண்டே வேகமாக வந்து மலை குன்றின் மீது மோதும் அலைகளை வேடிக்கை பார்த்து குதூகலப்பட்டு கொண்டு இருந்தாள் .
" அடியே ! அழகே உன் வேல்விழியால் என்னை காயப்படுத்தி விட்டு , ஒரு சமாதானமும் கூறாமல் செல்வது சரியா ! நான் இங்கிருந்து உயிரோடு திரும்பவேண்டும் என நினைத்தால் , ஒரு நிமிடமேனும் உன்னோடு நான் பேச வேண்டும் என கண்களால் கெஞ்சி அழைத்தான் "
மங்கையும் இவன் மீது மயக்கமுற்று இருந்ததால் , பாவம் இவன் என தோன்றிற்று பருவமங்கை அவளுக்கு .
குடிக்க தண்ணீர் பிடித்து வருதாக தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு காலி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வள்ளி குகை கோவிலின் வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியை நோக்கி நடக்க , அவளை பின் தொடர்ந்தான் வேலன் .
குடிக்க தண்ணீர் பிடித்து வருதாக தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு காலி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வள்ளி குகை கோவிலின் வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியை நோக்கி நடக்க , அவளை பின் தொடர்ந்தான் வேலன் .
குடும்பத்தினர் பார்க்கா வண்ணம் தண்ணீர் தொட்டியின் மறைவில் நின்று பேச ஆரம்பித்தார்கள். வேலனுக்கோ உடல் வியர்க்க ஆரம்பித்தது. தள்ளி நின்று பார்த்தபோது இருந்த தைரியம் அவள் அருகில் நின்ற போது சுத்தமாக இல்லை , அவனின் சிவந்த முகம் மேலும் சிவந்திற்று .
"பாடம் படித்து நிமிர்ந்த விழி – தனில்
பட்டுத் தெறித்தது மானின் விழி"
என்ற பாரதிதாசன் கவிதை போல. இருவரும் இந்த சந்திப்பை எதிர்கொள்ள முடியாமல் ஏதேதோ செய்கின்றனர். பின்னர் மெதுவாக
அவன் வாய்குளறி வந்து விழுந்தன வார்த்தைகள்.
"உங்க பெயர் என்ன ! நீங்க எங்க இருந்து வர்றீங்க "
என்றான் இதயம் தட தடக்க..
முகம் மலரும் வெட்கப் புன்னகையுடன் வாய் திறந்தாள் வஞ்சி அவள் .
செவ்விதழ் திறந்து சொன்னால் ! என் பெயர் பெயர் முகில்ஸ்ரீ ! நாஞ்சில் நாட்டில் இருந்து வருகின்றேன்"
செவ்விதழ் திறந்து சொன்னால் ! என் பெயர் பெயர் முகில்ஸ்ரீ ! நாஞ்சில் நாட்டில் இருந்து வருகின்றேன்"
என்று கூறி விட்டு அவனை ஒரு நிமிடம் உற்ற நோக்கியவள். மேலும் தொடர்ந்தாள்,
"நான் இந்த ஊரில் இருக்கும் என் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரியில் படிக்கபோவதாக கூறி கண்களை சிமிட்டிவிட்டு, தண்ணீரை நிரப்பிய பாட்டிலுடன் தன் குடும்பத்தினரை நோக்கி நடக்கலானாள். முன்னே அவள் நடந்தாலும் அவள் மனது அவளிடம் இல்லை . இங்கே இவன் நின்றாலும் இவன் மனது இவனிடம் இல்லை . மனங்கள் இடமாறிய பின்னும் மலராத காதல் , ஆம் காதல் மலர்ந்திற்று ..
வீடு திரும்பிய இருவருக்கும் மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி , இருவர் வீடும் அருகாமையில் அமைந்தன் தொடர்ச்சி, அரும்பிய காதல் மலர்திட்டு , யாரும் அறியாத வண்ணம் தொடர்ந்திட்டு .
வீட்டின் தென்னங்கொல்லையில் அனைவரின் கண் இமைகளுக்கு பின்னால் வளர்ந்த காதல் , ஒரு நாள் ஜெயந்தி பாட்டியின் இருண்ட கண்களில் விழுந்திற்று . பாட்டியின் மூலமாக இருவர் வீடுகளில் தெரிந்திற்று , இதனால் தொல்லைகளும் , கட்டுப்பாடுகளும், பிரச்சினைகளும் தினம் , தினம் பெறுகிற்று . இவை அனைத்தையும் இருவர் உள்ளமும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பிற்க்காக தாங்கிற்று. பெற்றோர் மனம் மாறும் வரை காத்திருந்தார் காதலர்கள் . காலம் கறையும் முன்னே அவர்களின் கனவு நடந்திற்று . முப்பாட்டன் முருகனும் அன்னை வள்ளியும் திருமண கோலத்தில் நிற்கும் படம் தாங்கிய திருமண பத்திரிக்கை ஊரெல்லாம் இருவீட்டாரின் சார்பிலும் கொடுக்கப்பட்டு , அவர்களின் பலநாள் காதல் கனிந்து கல்யாணத்தில் முடிந்தது .. 💞💞
- விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
Superb 👌👌👌
ReplyDeleteNice dear
ReplyDeleteSupper
ReplyDelete🙄 அந்த இளைஞன் இப்போ எங்கே எப்படி இருக்கிறானோ?
ReplyDeleteஎன நம்மை தேட வைக்கும் அளவிற்கு இயல்பாய் ஒன்றிப் போய் விட்டேன் கதையில்....
சிறப்பு .
Delete