"வாட்டர் டேங்கும் விலாங்கு மீனும்""
காலையில் கடைக்கு கிளம்பிய தாத்தாவிடம் அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசாவில், ஊருக்குள் இருந்த கடைக்கார தாத்தாவின் கடையில் அவரை படாத பாடுபடுத்தி , அவரிடம் திட்டு வாங்கி கொண்டு பார்த்து பார்த்து வாங்கி வந்த கண்ணாடி கோலிகுண்டுகளை எல்லாம் விளையாடி தோற்கும் நிலையில் இருந்த என்னிடம் வந்த என் நண்பன் மெதுவான குரலில்.
- " ஏல மீன்பிடிக்கப் போறேன் வர்றியா" என்றான்.
" எங்க போய் மீன் பிடிக்கபோற" என்றேன் .
- "வாட்டர் டேங்குக்கு போய் மீன் பிடிக்கலாம் " என்றான்.
அது ஊரில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீரேற்றும் பகுதி . தாமிரபரணி ஆற்றில் இருந்தும் ,ஆத்தூரான் கால்வாயில் இருந்தும் இராட்சத மோட்டார் மூலமாக உரிஞ்சப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆத்தூர் , ஆறுமுகநேரி , காயல்பட்டினம் , வீரபாண்டிபட்டினம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் கோடைகால நீர் தேக்கம் அளவில் மிகப்பெரியதும் , ஆழமானதாகும் . அந்த நீர்தேக்கத்தின் கரையை சுற்றி பதிக்கப்பட்டிருக்கும் சிமென்ட் பலகைகளில் படர்ந்து இருக்கும் பாசிகளில் கால் வைத்தால் வழுக்கி தண்ணீீீீீருக்குள் விழவேண்டியது தான் . தவறி விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகவும் கடினம். தண்ணீருக்குள் என்ன ஆபத்து இருக்கிறது என யாருக்கும் தெரியாது. அப்படிபட்ட நீர்தேக்கத்திற்கு போய் மீன்பிடிக்க தான் அவன் என்னை அழைக்கின்றான்.
" நான் தயங்கி கொண்டே வாட்டர் டேங்குக்கா வேண்டாம்டா வேற எங்காவது போலாம் " என்றேன் .
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க அவனோ நான் தயங்குவதை பார்த்து ..
"இல்லடா அங்கு தான் பெரிய பெரிய விலாங்கு மீன்லாம் கிடைக்கும்" என்றான் .
அவன் விலாங்கு மீன் என்றதும் எனக்குள் ஆர்வம் வந்தது . அதற்கு காரணம் என் பாட்டி சொன்ன கதை தான் . பாட்டி பிறந்த பால்குளம் ஊருக்கு அருகில் இருந்த கிராமத்தின் ஒரமாக ஓடிக்கொண்டிருந்த , மிகப்பெரிய வாய்க்காலின் கரையை ஓட்டி இருந்த , தன்னுடைய விவசாய நிலத்தில் சிறிய குடிசை கட்டி வசித்து வந்தார் தேக்கன் என்பவர். அவர் வீட்டின் பின்பக்கம் இருந்த காலி நிலத்தில் சில கோழிகளை வளர்த்து வந்தார். தினமும் மாலையில் வானம் கருப்பதற்குள் அவற்றை கூண்டுக்குள் அடைத்து விட்டு , மறுநாள் காலையில் திறந்து விடுவது வழக்கம்.
ஒருநாள் அவ்வாறு கூண்டுக்குள் அடைத்த கோழிகளில் ஒன்றை மறுநாள் காலையில் கூட்டை திறந்த போது காணாமல் போனதை கண்டு திகைத்தவர் , அந்த கோழியை எல்லா இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாளும் அது போலவே மற்றொரு கோழி காணாமல் போனது . ஆனால் இந்த முறை கோழி கூட்டில் இருந்து வாய்க்கால் வரை ஏதோ ஒன்று வந்து போனதிற்கான அடையாளம் தென்பட்டிருக்கிறது . அதை தொடர்ந்து சென்று போது தொலைந்து போன கோழியின் இறகுகள் சில வாய்காலின் ஓரமாக மிதப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தவர். அன்று கோழிகளை அடைத்த பிறகு வீட்டில் சோறு சமைத்த அடுப்பில் இருந்த கரியையும்,சாம்பலையும் எடுத்து வந்து காலையில் தெரிந்த அடையாளத்திலும் கோழி கூண்டை சுற்றிலும் போட்டு இருக்கின்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மிகப்பெரிய விலாங்கு மீன்கள் அங்கு புரண்டு கொண்டு இருந்திருக்கின்றன .
அதன் உடலில் அடுப்புகரியும் சாம்பலும் நன்றாக அப்பி கொண்டதால் அது அங்கும் இங்கும் நகர முடியாமல் கூண்டுக்கு அருகிலேயே கிடந்திருக்கின்றன. அப்போது தான் தேக்கனுக்கு தெரிந்திருக்கிறது தன் வளர்த்த கோழியை தின்றது இந்த விலாங்கு மீன்கள் தான் என்று . இவ்வாறு பாட்டி கதையை சொல்லி முடிக்கவும் . எனக்கோ ஆச்சர்யம் ஒரு மீன் எப்படி கரைக்கு வந்து வீட்டில் அடைத்து வைத்து இருந்த கோழியை சாப்பிடமுடியும் . தண்ணீரில் இருந்து வெளியே வந்தால் மீன் இறந்து விடாதா என்று பல கேள்விகள் எனக்குள் எழுந்திருந்தது.
அதனால் விலாங்கு மீனை பார்க்கும் ஆர்வம் மிகுதியால் எதை பற்றியும் யோசிக்காமல் அவனுடன் வாட்டர் டேங்கை நோக்கி புறப்பட்டேன். புறப்படும் முன் .. அருகில் இருந்த சிறிய ஒடையின் கரையில் சில மண் புழுக்களை தோண்டி எடுத்து கொண்டு ஊரில் பெரியவாய்காலின் கரையை அடைந்து வாய்க்காலின் கரையில் பசுமையான இலைகளுடன் கிளை விரித்து இருந்த அரச மரத்தின் அருகில் இருந்த பாசனமடையில் உக்கார்ந்து நண்பன் தான் கொண்டு வந்து இருந்த சிறிய தூண்டிலில் புழுவை கோர்த்து வாய்காலில் விட்டான் . சில நிமிடங்களில் ஒரு சிறிய உளுவை மீன் மாட்டிக்கொண்டது. அதை எடுத்துக்கொண்டு வாய்க்காலை கடந்து அக்கரைக்கு சென்றதும். நான் அவனிடம் இந்த சிறிய மீன் எதற்கு என்று கேட்டேன் . இந்த சிறிய மீனை தூண்டிலில் மாட்டிதான் பெரிய மீனை பிடிக்க போறோம் என்றான். அதற்கு முன்பு அப்படி கேள்விப்பட்டதில்லை . என்னடா சொல்ற மீனை போட்டு மீன் பிடிக்க போறோமா என்று ஆர்வம் குறையாமல் கேட்டேன். ஆமாம் என்று டவுசர் பையில் கையை விட்டு தூண்டிலை எடுத்து காட்டி இதை வைத்து தான் மீனை பிடிக்க போகிறோம் என்றான். அந்த தூண்டில் வித்தியாசமாக இருந்தது . கண்ணாடி போன்ற மெல்லிய நரம்பின் முனை பகுதியில் கட்டப்பட்டிருந்த மீன்முள் சாதாரணமாக நாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்துவதை காட்டிலும் பெரிதாகவும், மிதப்பு கட்டைக்கு பகுதிலாக ஒரு சிறிய கனமான பழைய இரும்பு துண்டும் இறுக்கமாக கட்டப்பட்டு இருந்தது. அதன் பெயர் வீசு தூண்டில் என்றும் அதை வைத்து பெரிய அளவிலான மீன்களை பிடிக்க முடியும் என அவன் கூறிய போது என்னுடைய ஆர்வம் அதிகமானது . பேசிக்கொண்டே வாய்க்காலின் கரையில் இருந்த அந்த தார் ரோட்டில் நடந்து அங்கு நின்றிருந்த பெரிய ஆலமரத்தை தாண்டி ரோட்டின் இடதுபக்கம் இருந்த பெரிய புளியமரத்தை ஓட்டினார் போல் பிரிந்து சென்ற அந்த கலர்மங்கிபோன சிவப்பு நிற சரல்கல் சாலையில் இறங்கி நடக்கலானோம். சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்து நின்று வேப்பமரங்கள் சூரியன் ஒளியை பூமி தொடாதவாறு தடுத்து அந்த பகுதி முழுவதும் நிழல் பரப்பி இருந்தது . தரையில் விழுந்து கிடந்த மரத்தின் சருகுகள் எங்கள் காலடியில் பட்டு நாங்கள் உள்ள நுழைவதை அந்த இடத்தில் வசித்த பல்லுயிரிகளுக்கு அறிவித்தது . சத்தம் கேட்டு இறை மேய்ந்து கொண்டு இருந்த காடைகளும் , கௌதாரிகளும் அருகில் இருந்த முட்புதருக்குள் ஓடி சென்று பதுங்கி கொண்டன. அவற்றை விரட்டி பிடிக்க நினைத்து புதரின் அருகே சென்ற போது அந்த புதரின் மேல் பகுதியில் கிடந்த மிகப் பெரிய பாம்புச்சட்டை மனதிற்குள் பீதியை கிளப்பிற்று.. அதனால் பறவைகளை பிடிக்கும் எண்ணத்தை விட்டு விட்டு மீண்டும் நீர்தேக்கத்தை நோக்கி நடந்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் கண்களில் படாமல் . நீர்தேக்கத்தின் வடக்கு பக்கத்தில் சென்ற ஒத்தையடி பாதையில் நடந்து . மரங்கள் அதிகமாக இருந்த நீர்தேக்கத்தின் வடமேற்கு பகுதியை அடைந்தேன்.
அதன் கரையில் ஏறி பார்த்த போது அதன் பிரம்மாண்டம் என்னை பிரமிக்க வைத்தது . அந்த தண்ணீர் தொட்டி சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது . கரை முழுவதும் சாய்தளமாக சிமெண்ட் பலகையினை அடுக்கி வைத்திருந்தார்கள் . அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்தேக்கம் தான் ஆனால் பார்க்க மிகப்பெரிய ஏரியை போல இருந்தது தொட்டியில் நிறைந்து இருந்த தண்ணீரில் சூரியனின் ஒளி பட்டு , கண்களை கூசவைக்கும் வகையில் வைர புதையல் போல டாலடித்தது கொண்டு இருந்தது. அவன் அருகில் கிடந்த கூர்மையான கல்லை எடுத்து உளுவை மீனை இரண்டு துண்டுகளாக்கி. கொண்டு வந்திருந்த இரண்டு தூண்டில்களில் முள்ளில் மாட்டி நரம்பில் கட்டியிருந்த கனமான இரும்பை பிடித்து கரையில் இருந்தபடி நீரை நோக்கி தூக்கி வீசினான் . காற்றை கிழித்து கொண்டு முள்ளில் மாட்டி இருந்த மீனை சுமந்து சென்ற அந்த இரும்பு துண்டு கரையில் இருந்து ஒரு முப்பது அடி தூரம் சென்று தண்ணிருக்குள் விழுந்தது அமிழ்ந்தது. தூண்டிலின் மறு முனையை கரையில் பெயர்ந்து இருந்த சிமெண்ட் பலகையின் அடிப்பகுதியில் சொருகி அதன் மேல் சிமெண்ட் பலகையினை போட்டு தூண்டில் வெளியே தெரியாமல் மறைத்து வைத்து விட்டு இருவரும் அருகில் இருந்த வேப்பமரத்தில் ஏறி அந்த பரந்த நீர் பரப்பை ரசிக்கலானோம்.. அந்த நீர்நிலைகளில் பட்டு குளிர்ந்து சிறு சிறு அலைகளை உருவாக்கியபடி சில்லென்று வீசிய காற்றில் அங்கும் இங்குமாக அசைந்தபடி தாழ்வாக தண்ணீரை தொட்டபடி இருந்த மரத்தின் கிளைகளில் ஒன்றில் நன்றாக சாய்ந்து படுத்தபடி சுற்றிலும் தங்க நிறத்தில் கொத்து கொத்தாக பழுத்து தொங்கிய வேப்பம்பழங்கள் சுவைத்தபடி மரக்கிளைகளோடு சேர்ந்து காற்றில் மிதந்து ஆடி கொண்டு இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை .சுமார் இரண்டரை நாழிகை கழித்து மெதுவாக இறங்கி வந்தோம். நண்பன் மெதுவாக முதல் தூண்டிலை வெளியே இழுத்தான். டேய் எதுவும் மாட்டி இருக்கிற மாதிரி தெரியலை என்றான் . ஆமாம் அதில் எதுவும் மாட்டவில்லை எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவதை தூண்டிலை இழுக்கும் போது ஏதோ ஓரு வித்தியாசத்தை உணர்ந்தவன் . என்னை சற்று தள்ளி நிற்க்கும் படி கூறி விட்டு

நரம்பை இழுப்பதும் சற்று நிறுத்தி விட்டு மீண்டும் இழுப்பதுமாக இருந்தவன் . ஒருகணம் சுண்டி இழுக்க என் கால் அருகில் வந்து விழுந்தது அந்த பாம்பு. டேய் பாம்புடா என்று அலறியபடி ஒரே துள்ளலில் பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறிய என்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவன். டேய் இது பாம்பு இல்லை விலாங்கு மீன் என்றான். நான் உற்று பார்த்தேன் மீன்களுக்கு இருப்பது போல் செவுள்களோ, வால் துடுப்பு , மேல் துடுப்பு , அடி துடுப்பு என எதும் இல்லை.எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை இப்போதும் பாம்பு மாதிரிதான் நெளிந்து கொண்டு இருந்தது . தூண்டிலில் மாட்டி இருந்த மீன் துண்டை முழுவதுமாக விழுங்கி தூண்டிலில் வசமாக சிக்கியிருந்த அது ஆவ்..ஆவ்.. என்று வாயை மட்டும் திறந்து திறந்து மூடியது . நண்பன் வந்து அதை பிடித்த போது அது அவனுடைய கையிலே சுருண்டு கொண்டு இருந்தது. நண்பன் அதை லாவகமாக சுருட்டி கையில் மடக்கி வைத்து கொண்டு வா போகலாம் என்று வீட்டை நோக்கி நடக்க . நான் அவனுடைய கைக்குள் நெளிந்து கொண்டு இருந்த மீனை வியப்பாக பார்த்து கொண்டே அவனை விட்டு இரண்டு அடி தள்ளி பின் தொடர்ந்தேன்.
விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
வேற லெவல் சூப்பர் சித்தப்பா
ReplyDeleteNice bro 👍
ReplyDeleteSuper super
ReplyDelete✌️
ReplyDeleteSuper
ReplyDeleteசூப்பர் நண்பா
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteArmai
ReplyDelete