" காதலே உன் காலடியில் "
"திருச்செந்தூர்" சூரனை வென்ற முப்பாட்டன் முருகனின் வீரத்திற்கு மட்டுமல்ல , காந்தர்வம் புரிந்து அன்னை வள்ளியை கவர்ந்த காதலுக்கும் பெயர் பெற்ற திருத்தலம் . தான்தோன்றிகளாக திரிந்தகுடிகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்த வேட்டுவர்குடி தலைமகன். குறிப்பறிந்து சொல்லும் குறவர்குடி தலைமகளின் மீது மையம் கொண்டு விவாகம் புரிந்த கதைகள் இன்னும் தமிழக மண்ணில் வள்ளி திருமண நாடகமாக தென்மாவட்டங்களின் கோவில் திருவிழாக்களில் நடைபெற்று வருகின்றன.. இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் . பாலகனாக பாலமுருகனை பலமுறை தரிசித்தவன். .. இன்று இளம் குமரனான பிறகு. அதே கோவிலுக்கு பொழுதை குதூகலமாக கழிக்க எண்ணி , பாட்டனின் பாதத்தில் பட்டு பரவசமாகும் பரந்து விரிந்த நீீீலவண்ண வங்கக்கடலில் நீராட கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு தோழர்களுடன் வந்திருந்தான், வேகமாக வீசும் காற்றின் ஜதிக்கு ...