"தில்லையில் அம்பலம்"
பாண்டிச்சேரியில் மூன்று மாதகாலம் தொழிற்பயிற்சிக்காக எங்கள் கல்லூரியில் இருந்து நண்பர்கள் பனிரெண்டு பேர் சென்றிருந்தோம். முதன் முறையாக குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் . முதல் சில நாட்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத தனிமை என்னை வாட்டி வதைத்தது. நாட்கள் போகப்போக நண்பர்களின் ஆதரவின் காரணமாக சகஜமானேன் . பிறகு விடுமுறை தினங்களில் நானும் நண்பர்களும் பாணடிச்சேரியையும் அதை சுற்றி இருக்கும் இடங்களையும் சுற்றி பார்த்தோம் . ஒவ்வொரு வாரமும் விடுமுறை கழிந்தபின் அடுத்த வார விடுமுறைக்காக காத்திருக்கலானோம்.. இதோ அடுத்த வாரம் வேலைக்கான கால அட்டவணை வெளியாகி விட்டது . வரும் வாரம் புதன்கிழமை எனக்கும் என் நண்பன் ராம்குமாருக்கும் விடுமுறை . இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து அறுபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் இருந்தன . ஆனாலும் தினம் தினம் நண்பர்களிடம் அங்கு போவதை பற்றி சிலாகித்து பேசிவந்தேன் . எப்போதும் "தில்லையம்பல நடராஜா" என்ற பாடலை முனு முனுத...