கவிழ்ந்த பயணமும் கலையாத நினைவுகளும்.
அம்மா சமையல் அறையில் நெய் காய்ச்சி கொண்டு இருந்தார் . தினமும் மோர் கடைந்து சிறிது , சிறிதாக சேர்த்து வைத்த வெண்ணையை உருக்கி கொதிக்க வைத்து பொன் நிறத்தில் பொங்கி வரும் சமயம் இளம் முருங்கை இலையை உருவி போட்டதும் .பட்.. பட்.. என்ற சத்தத்துடன் முருங்கை இலை முருகியதும் அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தை கொண்டு வந்து ஹாலின் நடுவில் நாற்காலியில் வைத்து மின்விசிறியை வேகமாக சூழலவிட்டு நெய்யை குளிர வைத்துவிட்டு.. "விக்னேஷ் என்ன பண்ணிட்டு இருக்க. மணி எட்டு ஆச்சு . " என்றார் . உள்ளறையில் எனக்கு பிடித்த இளம் நீலநிற சட்டையை அயன்பண்ணிக்கிட்டே , "இதோ இப்போ குளிச்சிட்டு வந்திடறேன்.... என்று வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை நோக்கி ஓடினேன் அந்த முன்னிரவு நேரத்தில் .. இதோ குளித்து முடித்து கிளம்பியாகி விட்டது . அப்பா தந்த பணத்தை பாக்கெட்டில் பத்திரபடுத்திவிட்டு வேகவேகமாக கிளம்பிய என்னை . "ஏல ! சாமி கும்பிட்டியா ? என அம்மா கேட்க . அமைதியாக முழித்து கொண்டு நின்ற என்னை "போ போய் சாமிகும்பிட்டு விபூதி பூசிகிட்டு போ !...