Posts

Showing posts from March, 2022

மறக்கமுடியாத பாடல்களும் ! அதை தொடர்புடைய நினைவுகளும் !

Image
இசையில் மயங்காதவர் யாரும் இல்லை , திரையிசை பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. சிலருக்கு தனிமையை கடப்பதற்கு , சிலருக்கு தனிமையை ரசிப்பதற்கு , சிலருக்கு மனதை உற்சாகமூட்டுவதற்கு , சிலருக்கு மனதை ஆற்றுவதற்கு,  சிலருக்கு உடல் களைப்பு நீங்க ,  சிலருக்கு மனக்கவலைகளை மறக்க,  சிலருக்கு மன அமைதியை கொடுக்க . என உலகில் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில் இசை பிடித்திருக்கும் . அதற்கு நானும் விதிவிலக்கில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த உலகின் ஒவ்வொரு தருணங்களையும் மெல்லிய இசையுடனே ரசிக்க பிடிக்கும் .அப்படி சில  பாடல்கள் சிலரையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளையும் மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றி இருக்கிறது மனதில்  ...        அப்பா தீவிர சிவாஜி ரசிகர் . சிவாஜி நடித்த திரைப்பட பாடல்கள் அவருக்கு பிடித்தமானது. ஒரு முறை நான் செய்த சேட்டைக்கு அப்பாவிடம் அடிவாங்கி தேம்பி , தேம்பி அழுது கொண்டே இருந்தேன் . ஒரு சில நிமிடங்களில் அப்பா நான் அழுவதை தாங்காமல் மனம் இறங்கி என்னை சமாதான படுத்த முயன்று.....

விவசாயிகளின் நண்பனை நம்பமுடிவதில்லை. . .

Image
   நீர் நிறைந்த நிலத்தில் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்கால்களுமாக செழுமை செறிந்த நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்த எங்கள்  கிராமத்தை சுற்றி இருக்கும் குளிச்சியான தோட்டங்களில் தவளைகள் , வயல் எலிகள் அவற்றை உணவாக உண்ணும் பாம்புகளும் நிறைந்து இருந்தன . பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவை . அவை மனிதர்களை தேடிவந்து கடிப்பதில்லை.  அவற்றுக்கு ஆபத்து என்று உணரும் போது அவை தாக்க முயல்கின்றன. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன . வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில நேரம் அவற்றினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மக்களுக்கு அவற்றை கண்டால் பயமும் , கொல்லவும் முயல்கின்றார்கள்.            சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் மெயின் பஜாரில் இருந்து எங்கள் ஊருக்கு செம்மண்கலந்து சிறு சரல் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு இருந்த  அந்த இருபது அ...

மனித பிணைப்பு ..

Image
     சமுகத்தில் மனிதம் மறைய காரணம் அதன் அடித்தளமான குடும்ப உறவுகள் சிதைந்தது தான். பணம் சேர்க்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.   எனக்கு எப்பொழுதும் எதையோ தலையில் சமந்தபடி ஓடுவது போல ஒர் உணர்வு ... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அந்த சுமை எனும் பணம் தேவைப்படுகிறது. அது இன்றி சமுகத்தை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது...அந்த பயம் இந்த சமுகத்திடம் இருந்தே எனக்குள் திணிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து வெளிவர இயலவில்லை..   ஆனால் இந்த பாரத்தை தூக்கிச் சுமந்து  கொண்டு என் தந்தை நடந்ததாக நினைவில்லை .. அவரும் அவரைச்சார்ந்த மனிதர்களுமாக வெகு எளிதாக இந்த வாழ்கையை வாழ்ந்திருந்தார்கள்.. பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் அவர் ஓடியதில்லை... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அவருக்கு அது தேவைப்படவில்லை . அதை விட உயர்வான மனித மனங்களை சேர்த்து வைத்திருந்தார்.  புற்று நோயின் பாதிப்பில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அப்பா . வீட்டில் சிறு சேமிப்புகளும் இல்லாத நிலையிலும் .மிகச்சிறப்பாக நடத்தி முடிந்த என் மூத்த சகோதரி...

மாப்பிள்ளை தோழர்கள் ( Groom Friends )

Image
           ஊரில் நண்பர்கள் வீட்டு திருமண விசேஷங்களில் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கும் இடங்களில் நிற்காமல் அந்த இடங்களை விட்டு  500 அடி தள்ளி ஒரு கும்பல் நிற்கும் அவனுவ தான் மாப்பிள்ளையின் நண்பர்கள் . மாப்பிள்ளை முறுக்கு என்று சொல்லுவாங்கல்ல  அது மாப்பிள்ளையை விட இவனுவகிட்ட தான் ரொம்ப ஓவரா இருக்கும் . திருமணவாழ்த்து வால்போஸ்டர் ஒட்டுறது , ஊர் இளைஞர்கள் சங்கம் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துமடல் கொடுப்பது ,  வேர்க்க விறுவிறுக்க  ஓடியாடி பந்தி பரிமாறுவது என இவனுவ செய்ற அலப்பறைகள் கொஞ்சம்  வேறுரகம்.        கல்யாணத்திற்கு முந்திய நாள் இரவு ஊர் தூங்கும் நேரத்தில இந்த கும்பல் கையில் பசை வாளியும்,  தங்கள் பெயர் போட்டு அடித்த வால்போஸ்டரையும் தூக்கி கொண்டு கிளம்பும்.. ஊருக்குள்ள கல்யாணமாப்பிள்ளை வீட்டில இருந்து மணபெண்ணின் வீடு வரை ஜனம் அதிகமா கூடுற இடங்களிளையும், புதிதாக வெள்ளையடித்து விளம்பரங்கள் செய்யாதீர்கள் என்று எழுதி இருக்கும் சுவத்துலயும், ஊர்களின் பெயரை சுமந்து நிற்கும் பெயர் பலகைகளிலும் . தன்னுடன...