காலத்தினால் செய்த நன்றி
கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்த காலம் , அரசின் பொதுமுடக்க உத்தரவின் காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை . வாகனங்கள் ஓடவில்லை, அரசு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளும் ,கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அலைந்த அலைச்சல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இந்த இரண்டு வருடங்களில் நம் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய பலரை இழந்து இருக்கின்றோம். முதல் அலை வரும் போது மக்களிடம் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. ஆஸ்பத்திரியில் தனிமை படுத்தப்பட்டவர்கள் அங்கு சென்று பாட்டு, நடனம் என குதூகலமாக பொழுதை கழித்தனர் அது போதாது என்று அவர்கள் அதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பி விட்டனர் . நானும் ஒன்றும் இல்லாததை அரசாங்கம் பெரிது படுத்துகின்றது என்றே நினைத்தேன், இரண்டாவது கொரோனா அலையில் உறவினர்களையும் ,நண்பர்களையும் இழக்கும் வரை . என் வீட்டாரை ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து கொண்டே இருந்தேன். வேலை காரணமாக தூர தேசத்தில் நான் இருந்ததால் அவர்களுக்கு ஒன்று என்றால் என்ன செய்வது என்ற கவலை என்னை ஆக்கிரமித்து இருந்தது க. ...