தீபாவளியும் , விநாயகர் சதுர்த்தியும் நான் அறிந்தது .
எனக்கும் என்னவளுக்குமான சிறு உரையாடல் . என்னவள் சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . தற்போது இந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பகுதியாக உள்ளது . என்னவள் அவருடைய தோழியிடம் தான் சென்னையில் இருந்த வரைக்கும் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடியதாகவும். தற்போது ஆத்தூரில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலை வாங்க பல இடங்களில் அழைந்து திரிந்தும் அவை கிடைக்கவில்லை என்றும் கூறியதாகவும் . அதற்கு அவரின் தோழி நமது ஊரில் விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டாப்படுவதில்லை என்றும் கூறியதாகவும் என்னிடம் கூறி . உங்க ஊரில் எதுவுமே கிடைப்பதில்லை என்று என்னை வம்புக்கு இழுத்தார் .
நான் என்னவளிடம் விளக்கம் கூற ஆரம்பித்தேன் . விநாயகர் வழிபாடு மராட்டியத்தில் புனே நகரைச் சேர்ந்த சித்பவனப் பிராமணர் இடையே தோன்றியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . பின்னர் கீழைசாளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலை கொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் வந்தது என கூறுவர் . கி.பி ஆறாம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ளார் . அதற்கு முன்பு பிறந்த சங்க இலக்கியங்களில் இக்கடவுளை பற்றி குறிப்பு இல்லை . விநாயகர் சதுர்த்தி புனே , பம்பாய் ஆகிய மேற்கு இந்திய நகரங்களில் தான் மிகச்சிறப்பாக கொண்டாப்படுகிறது . இப்பொழுது தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் பரவலாக கொண்டாடினாலும் , மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாட மாட்டார்கள் . செட்டியார் எனப்படும் பலவகைப்பட்ட வியாபார சாதியினரை தவிர . இப்போதும் தமிழ்நாட்டில் வடநாட்டில் இருந்து இங்கு வந்த மார்வாடிகள் எனப்படும் வணிகச்சாதியினர் மூலமாகவே விநாயகர் சதுர்த்தி கொண்டப்படுகின்றது .
விநாயகர் சதுர்த்தி எனக்கு விவரம் தெரிந்து 35 வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் கொண்டாப்பட்டது இல்லை , இது மத அரசிலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வடநாட்டில் செயல்படுத்தி வெற்றி கண்ட பார்முலாவை தமிழ்நாட்டிலும் செயல்படுத்தி மத உணர்வை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கிறார்கள் . இது மட்டும் அல்லாது ரக்க்ஷாபந்தன் , பிறந்தநாள் , புத்தாண்டு பிறப்பு , ஹோலி என நகரங்களில் பிரபலமாக கொண்டாப்படும் எதுவும் எங்கள் ஊரில் கொண்டாப்பட்டது இல்லை . தீபாவளி கூட எங்கள் ஊரில் முன்பு வரை பிரபலமாக கொண்டாப்பட்டது இல்லை .
என்னவள் :- என்னது தீபாவளியையும் கொண்டாடுவதில்லையா ?
ஆமாம் ! தை திருநாள் போல மரபுவழி பொருளாதாரம் மற்றும் திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும், சடங்குகளோடும் தீபாவளி அமையவில்லை இது இந்து சமய விழாவாக மட்டுமே பார்க்கப்படுகின்றது . தை பொங்கல் சமய எல்லையினை கடந்து நிற்கும் திருவிழா , இது பழந்தமிழரின் அறுவடை திருவிழா எனவே தான் ரோமன் கத்தோதிக்க தேவாலயங்களில் கூட தை பொங்கல் கொண்டாப்படுகின்றது. நமது ஊரிலும் இருக்கும் கிருத்துவர்களும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதை நாம் பார்க்கலாம் . கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் மூலமாக "இந்து தேசம்" தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட போது தீபாவளி கொண்டாட்டம் தெலுங்கு பிராமணர்களால் தமிழ்நாட்டில் நுழைந்தது . சமண மற்றும் பெளத்த மதம் பெரும் அளவில் பரவி இருந்த காலகட்டங்களில் சமணத்தை அழிக்க பிராமணியம் பலவழிகளில் முயன்றது . சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரர் ஆன வர்த்தமான மகாவீரர் தான் வீடுபேறடைந்த ( இறந்த) நாளை தீபங்கள் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார் . அதை சமண மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட , அதையே வைதீக மதத்தை சேர்ந்த பிராமணர்கள் , நரகாசுரன் அழிந்த நாள் என்று வைதீக கட்டுகதைகள் மூலம் கொண்டாடத் தொடங்கினார்கள். ( இந்து தேசியம் நூலில் - தொ.ப )
நரகாசுரன் கதையை நினைவுபடுத்தி பாருங்கள் . நரகாசுரன் ( சமண மதம் ) என்பவனை எதிர்த்து விஷ்ணு ( வைதீகம் ) போரிட்டு வெல்ல முடியாமல் கடைசில் பூமாதேவி ( இயற்கையெய்தல் ) அவரை அழித்ததாகவும் . நரகாசுரன் அதை கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் வைதீகம் சொன்ன கட்டுக்கதையை வர்த்தமான மகாவீரர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக புரியும் . தமிழ் சமூகங்களில் நீர்த்தார் ( இறந்த) சடங்குகளில் , எண்ணெய் தேய்த்து குளித்தலும் ஒன்று . இதனால் தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள் . இப்போதும் தெலுங்கு பிராமணர்கள் போல தமிழக பிராமணர்கள் அதிக முனைப்புடன் தீபாவளியை கொண்டாடுவது இல்லை . தீபாவளி பண்டிகை ஆடைகள் ,அணிகலன்கள் ,உணவு பதார்த்தம் சம்மந்தப்பட்ட பொருட்கள் என வணிகமயமாகி மீடியாக்களின் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு , இன்று பரவலாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது . என்னை பொறுத்த வரை கார்த்திகை மாதம் நாம் கொண்டாடும் தீபத்திருநாள் தான் தமிழரின் பண்டிகை ஆகும் .
பொதுவாக நகரங்களில் வணிகம் சார்ந்து பலஇன மக்கள் வாழ்ந்து வருவது இயல்பு . அவ்வாறு வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் பண்பாட்டு சார்ந்த விழாக்களை கொண்டாவது வழக்கம் . அந்த கொண்டாட்டங்கள் கொஞ்சம் ,கொஞ்சமாக பரவி பெருமக்கள் அனைவரும் கொண்டாடும் விழாவாக மாறி இருக்கின்றது . இத்தகைய கொண்டாட்டங்கள். மக்கள் அடர்வு , பணப்புழக்கம் நிறைந்த நகரங்களில் எளிதாக பரவி விடுகின்றன. ஆனால் அவை அவ்வளவு எளிதாக கிராமங்களை சென்றடைவது இல்லை . கொண்டாப்படுவதும் இல்லை . ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள். நகரங்களில் இருந்து நமது கிராமங்களை வந்தடைந்த பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் எதுவும் நம் தமிழரின் பண்பாட்டு விழாக்கள் கிடையாது .
- விக்கி இராஜேந்திரன் ✍✍✍😢
இப்போது தீபாவளி பண்டிகை ஒரு முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மாறி விட்டது அதனால் தீபாவளி திருநாளை புறக்கணிக்க முடியாது .
ReplyDeleteஆமாம் ! கண்கவர் பட்டாசுகளின் ஒளியும், ஒலியும் தான் இன்றும் சிறுவர்களை அதை நோக்கி கொண்டு செல்கின்றது . அதை தவிர்த்து தீபாவளியை கொண்டாட காரணங்கள் இல்லை
Delete