எங்கள் ஊர் மாசி மாத மகா சிவராத்திரி .
தமிழ்நாட்டின் சமூக பண்பாட்டை பேசிய அறிஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்த மதுரையே தமிழ்நாட்டின் பண்பாடு என்பதோடு அமைந்து விடுகின்றனர் . ஆயினும் மதுரைக்கு தெற்கே பல நூறு கி.மீ வரை தமிழ்நாடு பரந்த நிலப்பரப்பினையுடையது என்பதை போதிய அளவில் கணிக்க முயலாமல் விட்டுவிட்டனர் . அந்த பரந்த நிலப்பரப்பில் இயற்கையின் அரணாக திகழும் பொதிகை மலையில் உருவாகி முன்பு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்து . தற்போது தென்காசி ,திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்கள் என பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் இடம் எல்லாம் பசுமையை பெருக்கி வளர்க்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின் கரையில் தான் பண்டைய தமிழரின் தொல் சமய,பண்பாட்டினை உள்வாங்கி வளர்ந்த சைவ , வைணவத்தின் முக்கிய திருத்தலங்களான நவ கைலாசமும் , நவ திருப்பதியும் அமைந்துள்ளன. அந்த பழைய மதங்கள் காட்டும் , கார்த்திகை , திருவாதிரை , மாசிகளரி மற்றும் மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம் , சித்திரை பிறப்பு , வைகாசி விசாகம் , ...