மத அரசியலும் , பாசிசமும் 1
எந்த ஒரு மனிதனின் வாழ்வும்,அவரது உழைப்பு,வாய்ப்பு ,ஆற்றல் ,அறிவு அவர் பேணும் அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைகின்றது என்றாலும் வாழ்க்கையின் போக்கை அவர்கள் அறியாமலேயே தாம் விரும்பும் திசை வழியில் செலுத்தும் ஆற்றல் அரசுக்கும் , அரசாங்கத்துக்கும் கூட உண்டு . ஜனநாயக அடிப்படையில் அமையும் அரசாங்கம் கூட அறுதிப் பெரும்பான்மையோடு அமையும் போது பெரும்பான்மைவாத அராஜகம் தலை தூக்கத்தான் செய்கிறது . ஆட்சியில் அமர்ந்தோர் காட்டாறு போல தங்கள் அதிகாரத்தை செலுத்த முற்ப்படும் போது அது செல்லும் வழியில் உள்ள உதிர்ந்த சருகுகளை , கிடக்கும் கழிவுகளை மட்டுமின்றி பயன்படும் மரங்களையும் ,மண்ணையும் அடித்துச்செல்லும். விளைநிலங்களையும் நாசமாக்கி செல்வதுமுண்டு .
இப்போது இந்தியாவில் ஆட்சிக்கு வந்தமர்ந்துவிட்ட இந்து வெறி ,கார்ப்பரேட் ஆதரவு பாஜக அரசும் அப்படித்தான் அது ( Now or Never ) இப்போது விட்டால் எப்போதும் செய்ய முடியாது என்ற சிந்தனையுடன் வெறித்தனமாக செயல்பட்டு வருகின்றது . இந்தியாவின் பெருமையாக சொல்லப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது முழுவதும் உண்மையானது அல்ல எனினும் - இயல்பில் ஒன்றிவிட்ட ஒற்றுமையையும் சிதைத்து வேற்றுமைப்படுத்துவதில் உறுதியாக நிற்கிறது . பன்முகத்தன்மை என்பதை அழித்து ஒற்றைக் கலாச்சாரம் . இந்து கலாச்சாரத்தை அவர்கள் முன்வைக்கும் பண்பாட்டு தேசியத்தை நிலைநாட்டத் துடிக்கின்றது. பெரும் விளம்பர உதவியோடு கட்டி எழுப்பப்பட்டுள்ள புனித பிம்பம் கலைவதற்குள் தாங்கள் விரும்பும் கார்ப்பரேட்டுகளை உச்சநிலையில் கொண்டு சேர்க்க உலகம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஓடித்திரிந்து ஒப்பந்தங்களை அவர்களுக்காக பெற்ற கொடுக்க பதைபதைப்போடு பணியாற்றுகிறது.
இந்து மத வெறியர்கள் இந்து பண்பாட்டு தேசியம் அமைப்பதற்கும் - சமுக ஆதிக்கத்தை , சமுக மேலாண்மையை , அவர்களது அரசியல் செயல்பாட்டை உறுதிப்படுத்த , ஆன்மீக போர்வையில் செயலாற்றும் சங்கரமடம் , அனைத்து மட்டங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயலும் பார்ப்பனீயம் . அதில் இருந்து விடுவித்து கொள்ள முயற்ச்சிக்கும் எவரையும் பல்வகை சூழ்ச்சிகள் செய்து வீழ்த்தி . தங்கள் குள்ள நரி அரச தந்திரத்தின் மூலமாகவும் ஆங்கிலேயர்களால் அளிக்கப்பட்ட இந்து என்னும் சொல்லின் மாயவலைக்குள் மந்திரம் , எந்திரம் என பல தந்திரங்கள் செய்து ஒற்றுமை என்ற பெயரில் அடிமைபடுத்தி உங்கள் தனிப்பட்ட இனம் , மொழி , பண்பாடு சார்ந்த அறிவு , கலாச்சாரம் சார்ந்த கல்வி என அனைத்தையும் அழித்து . அவர்களின் மொழியையும் . சமுக சனாதனத்தையும் திணித்து நான் உயர்ந்தவன் , நீ தாழ்ந்தவன் என்று உங்களை அடிமைபடுத்தி அவர்களின் பழங்கால அதிகாரத்தை நிலை நிறுத்தப்பார்க்கின்றது. நீங்கள் சைவமாக இருங்கள் , வைணவமாக இருங்கள் ஆனால் ஒரு போதும் இந்துவாக இருக்க நினைக்காதீர்கள்..

- விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍✍
Comments
Post a Comment