எங்கள் பண்பாடும், திருவிழாவும் , வழிபாடும் - ( நவராத்திரி , திருக்கார்த்திகை, கிழவி நோன்பு.
பருவகாலங்கள் இளவேனில் காலம் , முதுவேனில் காலம் ,கார் காலம் , கூதிர் காலம் , முன் பனி காலம் , பின் பனி காலம் என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன . அந்தந்த கால நிலைக்கு ஏற்றவாறு அந்த நிலப்பரப்பில் உள்ள தெய்வங்களுக்கு மக்கள் விழா எடுப்பது வழக்கம் . தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்கள் புவியியல் அமைப்பில் தென்மேற்கு , வடமேற்கு பருவமழையினை பெறுகின்ற நிலப்பகுதியாகும். எனவே மழை குறைவாக பொழியும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர நாளே நாட்டார் ( குலதெய்வம் ) வழிபாட்டுக்குரிய நாட்களாக இருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மாசி மாத மாசிகளரி நாளை நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக வைத்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்கள் முழுநிலவு நாட்களிலேயே! கொண்டாடப்பட்டு வந்தன . தை பூசம் , மாசி மாதத்து சிவராத்திரி , சித்திரை மாதத்து சித்திரை திருவிழா , வைகாசி மாதத்து விசாகம் போன்ற இந்த முழு நிலவு நாட்களே தமிழர்களின் திருவிழாநாளாகும் . இன்றும் தமிழகத்தின் கிராமங்களில் தமிழர்களின் தொல் பண்பாட...