"கள்ளும் கற்று மற"
சங்கால இலக்கியங்களில் மதுபானம் பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. " கள்" என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். "கள்" என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது. மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும், தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஊர் திருவிழாவிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காக சொந்தமாக மதுபானங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ் சமுதாயங்களில் இருந்தது .தமிழ்நாட்டின் பனங்கள்ளும் , கேரளத்தின் தென்னங்கள்ளும் மிகவும் பிரபலம் . தமிழ்நாட்டில் பனங்கள் இறக்குவது தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது .. ...